---
*சிவகங்கை மாவட்டக் காவல்துறை அதிரடி: மலேசியாவிற்கு தப்பிய கொலைக் குற்றவாளி LOC மூலம் டெல்லியில் கைது!*
*சிவகங்கை:* மதகுபட்டி காவல் நிலைய குற்ற எண் 226/2026 (BNS பிரிவு 296(b), 109, 103(1))-ன் கீழ் பதிவான பாகனேரி கார்பென்டர் பாபு கொலை வழக்கில் தலைமறைவாகி மலேசியாவிற்கு தப்பிச் சென்ற குற்றவாளி *சியாம் சுந்தர் (27)* டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
*சம்பவம் என்ன?*
கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி, சிவகங்கை போஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த கார்பென்டர் பாபு (60) தனது சொந்த ஊரான பாகனேரிக்கு சென்றிருந்தார். அங்கு ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் உள்ள ஊரணி அருகே ஆலமரத்தடியில் மது அருந்திக் கொண்டிருந்த நெற்புகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (50), சின்ன திருஞானம் (32), சியாம் சுந்தர் (27), இளந்திரை (35) ஆகியோரால் கல்லால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த பாபு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதில் பன்னீர்செல்வத்தை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில், சியாம் சுந்தர் மலேசியாவிற்கு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
*LOC மூலம் சிக்கியது எப்படி?*
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், தலைமறைவு குற்றவாளியை பிடிக்க Bureau of Immigration மூலம் *Look Out Circular (LOC)* பிறப்பிக்கப்பட்டது.
மலேசியாவில் இருந்து சொந்த ஊர் திரும்ப டெல்லி வந்தபோது, டெல்லி விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டு பிடித்து வைத்தனர்.
தகவலறிந்த மதகுபட்டி போலீசார் உடனடியாக டெல்லி சென்று குற்றவாளியை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்ற தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கருத்துகள்