*கதை 1996-ல் தொடங்குகிறது.*
அஸ்ஸாம், ஜமுனாமுக் தொகுதி. ஒருவர் MLA-வாக ஜெயிக்கிறார். பெயர் முகமது ஜலாலுதீன். பல ஆண்டுகள் கழித்து தெரிகிறது - அவரிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட்! அவர் இந்தியரே இல்லை. 2008-ல் கவுகாத்தி ஹைகோர்ட் அவரை தகுதி நீக்கம் செய்து எழுதுகிறது - "இவர் கிங்மேக்கராக இருந்தார்".
அந்த கதை தான் 2026-ல் மீண்டும் வந்துள்ளது.
கேரளாவில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வாக்காளர் பட்டியலில் இருப்பது அம்பலம். மேற்கு வங்கத்தில் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்து இரட்டை வாக்கு. பீகாரில் நேபாளம், வங்கதேசம், மியான்மர் தொடர்பு. பீகாரில் மட்டும் SIR-ல் 22 லட்சம் இறந்த வாக்காளர், 7 லட்சம் நகல் பதிவு நீக்கம், 21.5 லட்சம் புதிய வாக்காளர் சேர்ப்பு.
இதனால் தான் தேர்தல் ஆணையம் *SIR - சிறப்பு தீவிர திருத்தம்* கொண்டு வந்தது. 9 மாநிலத்தில் 7.5 கோடி போலி வாக்குகள் நீக்கும் நடவடிக்கை.
SIR தேவையா இல்லையா என சர்ச்சை நடக்கும் போது, நேற்று *124 முன்னாள் IAS, IFS, IPS, IRS, IFoS அதிகாரிகள்* ஒரு பகிரங்க கடிதம் எழுதினார்கள். அது.
முன்னாள் வெளியுறவு செயலாளர் Kanwal Sibal, முன்னாள் தலைமை செயலாளர்கள் R.D. Kapur, Samirendra Chatterjee, Gopal Krishna, தமிழக முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் Sheela Priya, முன்னாள் வருமான வரி DG-கள் S S Rana, R K Gupta, முன்னாள் MHA துணை செயலாளர் R V S Mani (Padma Shri), முன்னாள் DC-கள் Jai Shankar Tiwary, Dilip Jha, Jata Shankar Chaudhary, IRCON இயக்குனர்கள் B P Singh, V P Singh, வருமான வரி கமிஷனர்கள் J P Prakash, Pradeep Kumar உட்பட 124 பேர்.
*அவர்கள் கடிதத்தில் 3 முக்கிய வரிகள்:*
*1.* _"தூய்மைப்படுத்தப்படாத பட்டியல் வாக்காளரை பாதுகாக்காது, மோசடிக்காரரை பாதுகாக்கும்"_
*2.* _"நீங்கள் வெற்றி பெறும் போது ஒரு அமைப்பு நேர்மையாகவும், தோற்கும் போது மோசடியாகவும் இருக்க முடியாது"_
*3.* _"கேள்வி கேட்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை, நிரூபிப்பது குற்றம் சாட்டுபவரின் கடமை"_
மேலும் அவர்கள் சொல்கிறார்கள் - பழைய வாக்குச்சாவடி கைப்பற்றுதல், கள்ள வாக்கு திணிப்பு காலம் முடிந்துவிட்டது. இன்று EVM சீல், VVPAT, முகவர் பாதுகாப்பு, பல அடுக்கு சோதனை உள்ளது. உச்ச நீதிமன்றமே SIR-ஐ ஆய்வு செய்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை உறுதி செய்துள்ளது.
1996-ல் ஒரு பாகிஸ்தான்காரன் MLA ஆன கதை மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்கு தான் இந்த 124 அதிகாரிகள் SIR-ஐ ஆதரிக்கிறார்கள்.ஒரு பாகிஸ்தான்காரன் MLA ஆன கதை - SIR ஏன் தேவை?* ---
*1996-ல் நடந்த அதிர்ச்சி:*
அசாம் ஜமுனாமுக் தொகுதி 90-ல் MD கமருதீன் என்பவர் MLA தேர்தலில் நின்றார். அவரிடம் இந்திய வாக்காளர் அட்டை, நில பத்தா எல்லாம் இருந்தது. ஆனால் விசாரணையில் அவர் *02.11.1994-ல் கராச்சியில் பாகிஸ்தான் பாஸ்போர்ட் (No KA/509814) வாங்கி, 07 நவம்பர் 1994-ல் கராச்சி-டாக்கா விமானத்தில் வந்து, பின் எல்லை தாண்டி அசாம் வந்தவர்* என தெரிந்தது.
கவுகாத்தி ஹைகோர்ட் கூறியது: _"This can happen only in Assam"_ - இது அசாமில் மட்டுமே நடக்க முடியும். 03.02.1998-ல் அவர் நாடு கடத்தப்பட்டார்.
*2008 தீர்ப்பு - கிங்மேக்கர்:*
23 ஜூலை 2008-ல் நீதிபதி B.K. ஷர்மா 61 வெளிநாட்டவர் வழக்கில் 95 பக்க தீர்ப்பில் கூறினார்: *"Bangladeshi migrants have become kingmakers in Assam" - வங்கதேசத்தவர்கள் அசாமில் கிங்மேக்கர் ஆகிவிட்டனர்*.
*SIR ஏன் தேவை?*
1. வெளிநாட்டவர் வாக்காளர் பட்டியலில் உள்ளனரா என சரிபார்க்க
2. குடியுரிமை இல்லாதவர்கள் தேர்தலை பாதிக்காமல் தடுக்க
3. ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை மீட்க
1996-ல் ஒரு பாகிஸ்தான்காரன் MLA ஆனான், 2008-ல் கிங்மேக்கர் என நீதிமன்றமே சொன்னது. இன்று SIR மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. இது அரசியல் அல்ல, தேச பாதுகாப்பு.
SIR வருவதற்கு முன்பே* அயல்நாட்டினர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற சம்பவங்கள் பல மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதான் SIR நடத்த காரணமே.
1. கேரளா - 500+ பேர்
கேரளா SIR-ல் *500-க்கும் மேற்பட்டோர் இந்திய குடியுரிமை இல்லாதவர்கள்* என கண்டுபிடிக்கப்பட்டது.
- வயநாட்டில் 8 நேபாளியர், காசர்கோடு 4, திருச்சூர், கொல்லம், எர்ணாகுளத்திலும் நேபாள மற்றும் இலங்கை வம்சாவளியினர்
- இவர்கள் SIR-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலில் எப்படியோ சேர்க்கப்பட்டிருந்தனர். 2002 அடிப்படை பட்டியலில் மேப்பிங் இல்லாததால் விசாரணைக்கு அழைத்தபோது இந்திய குடியுரிமை ஆவணம் காட்ட முடியாமல் நீக்கப்பட்டனர்
2. பீகார் - நேபாளம், பங்களாதேஷ், மியான்மர்
பீகார் SIR-ல் BLO-க்கள் வீடு வீடாக சென்றபோது *நேபாளம், பங்களாதேஷ், மியான்மர் நாட்டினர்* வாக்காளர் பட்டியலில் இருப்பது தெரிந்தது.
அவர்கள் ஆதார், ரேஷன் கார்டு, டொமிசைல் சான்றிதழ் போன்ற இந்திய அடையாள ஆவணங்களை போலியாக பெற்று வாக்காளராக பதிவாகி இருந்தனர். இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என தேர்தல் ஆணையம் கூறியது.
தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார்: "இந்திய அரசியலமைப்புப்படி இந்திய குடிமக்கள் மட்டுமே MP, MLA-க்கு வாக்களிக்க முடியும். வெளிநாட்டவர் பெயர்கள் விசாரணைக்கு பிறகு நீக்கப்படும்" என்றார்
3. மேற்கு வங்கம் - பாகிஸ்தானியர் கூட வாக்களித்தார்
ED கைது செய்த பாகிஸ்தான் குடிமகன் *ஆசாத் முல்லிக்* என்பவர் போலி ஆவணங்கள் மூலம் முதலில் பங்களாதேஷ், பின் இந்திய குடியுரிமை பெற்று *Dum Dum-Uttar தொகுதியில் வாக்காளராக பதிவு செய்து 2021 சட்டமன்ற தேர்தலிலும் 2024 மக்களவை தேர்தலிலும் இருமுறை வாக்களித்துள்ளார்*. அவரைப் போல பல பங்களாதேஷியர் போலி பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு மூலம் EPIC பெற்றுள்ளனர்
4. எண்ணிக்கை எவ்வளவு?
- பீகாரில் மட்டும் முதலில் சந்தேகிக்கப்பட்ட வெளிநாட்டவர் சுமார் 1,087 பேர், இறுதியில் 689 பேர் தகுதியற்றவர் என நீக்கப்பட்டனர். சில இடங்களில் நேபாள பெண்கள் திருமணம் மூலம் வந்து பழைய பட்டியலில் இருந்துள்ளனர்
- மேற்கு வங்கத்தில் SIR-க்கு பின் 58 லட்சம் பெயர்கள் நீக்கம், அதில் *1,83,328 பேர் 'போலியான வாக்காளர்கள்*
*---
*வெளிநாட்டினரை வாக்காளராக்க கோரி போராட்டம் - கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர் டெல்லியில் கைது*
அயல்நாட்டினரை இந்திய வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினரை (SFI) டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.
*நடந்தது என்ன:*
மத்திய அரசு சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கை (SIR - சிறப்பு தீவிர திருத்தம்) மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து SFI மாணவர்கள் டெல்லியில் தடையை மீறி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை (Barricade) தாண்ட முயன்றவர்களை போலீசார் தடுத்து, பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர். THEEKKATHIR நாளிதழ் வெளியிட்ட காட்சிகளில் மாணவிகள் கைது செய்யப்படும் காட்சி பதிவாகியுள்ளது.
*காவல்துறை தரப்பு:* சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், அனுமதியின்றி நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. --












கருத்துகள்