ஜாபர் சாதிக் போதை வழக்கில் NCB மனுவை நிராகரித்த நீதிமன்றம் - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
*புதுடெல்லி, அக்டோபர் 12:*
50 கிலோ Pseudoephedrine பறிமுதல் தொடர்பாக 2024-ல் பதிவான பரபரப்பான *SC No.150/2024 (Narcotics Branch Delhi Vs Mukesh PU & Ors)* வழக்கில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) தாக்கல் செய்த கூடுதல் ஆவண மனுவை *RACC சிறப்பு நீதிமன்றம் (NDPS-07) பகுதியளவு நிராகரித்துவிட்டது.*
*நீதிமன்றத்தில் நடந்தது என்ன?*
டெல்லி RACC வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிபதி *திரு. சந்தீப் யாதவ்* முன்பு 12.10.2026 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
- NCB தரப்பில் திரு. அருண் கத்ரி (LD. SPP) சார்பில் திரு. ஹர்ஷ் பாட்டியா ஆஜர்.
- குற்றம் சாட்டப்பட்ட 4-வது நபரான *ஜாபர் சாதிக்* சார்பில் திரு. காளி தரன் K.M. ஆஜர்.
- மற்ற 4 பேர் (முகேஷ் PU, முஜீப் ரஹ்மான், அசோக் குமார், S.G.சதானந்தம் @ சதா) சார்பில் திரு. S.ஜீவானந்தன் ஆஜர்.
*அடுத்து என்ன?*
விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து NCB தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு *05.01.2027* அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதனால், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு குறித்த வாதம் *22.01.2027*-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
*பின்னணி:*
இந்த வழக்கில் மொத்தம் 5 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 29 மாதங்களாக NCB, ED விசாரித்து வரும் நிலையில், முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொடர்பு இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் மட்டுமே என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
*பப்ளிக் ஜஸ்டிஸ் - உண்மையின் குரல்*


கருத்துகள்