*தேதி: 29-09-2026 | இடம்: டெல்லி CWC கூட்டம்*
சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மூவரும் ஒரு தீர்மானம் நிறைவேற்றினர்.
> "தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். SIR மூலம் நீக்கப்பட்ட 13.30 கோடி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்"
ஒரு தனியார் தொலைக்காட்சி இந்த செய்தியை போட்டதும், தமிழ்நாட்டில் ஒரு குரல் எழுந்தது.
> *"இதென்ன பிரமாதம். பிரிந்து போன பங்களாதேஷ், பாகிஸ்தான் மக்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க வேண்டும். 200 வருடம் ஆண்ட ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், போர்த்துகீசியர், டச்சுக்காரர்களுக்கும், மலேசிய ரோஹிங்யாக்களுக்கும், அடையாளம் இன்றி போன மொகலாயர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றாலும் சொல்லுங்கள். 60 வருடமா பாக் காங்கிரஸ் கட்சி சொன்னதை கேட்டு முட்டாளாக இருந்தோம்"*
இது தான் இன்று சோசியல் மீடியாவில் வைரல்.
*1. உண்மை புள்ளிவிவரம் என்ன?*
காங்கிரஸ் சொல்லும் 13.30 கோடி என்பது இன்னும் முடியாத 3ம் கட்டம் உட்பட கணக்கு. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக சொல்வது:
- Phase 1+2-ல் முடிந்தது - 10 மாநிலம் + 3 UT - *5.18 கோடி பெயர்கள் நீக்கம் (10.2%)*
- பீகார் - 7.89 கோடியில் இருந்து 7.42 கோடி - 65 லட்சம் நீக்கம் (22.3 லட்சம் இறந்தவர், 36.2 லட்சம் இடம்பெயர்ந்தவர், 7 லட்சம் இரட்டை பதிவு)
- மகாராஷ்டிரா - 2.07 கோடி - சத்தீஸ்கர் மாநிலத்தை விட பெரிய எண்
- உ.பி - 2 கோடி நிகர குறைவு, மேற்கு வங்கம் - 90.8 லட்சம் (11.9%)
இவர்கள் எல்லாம் Ghost Voters - ஒரே பெயரில் இரட்டை பதிவு, இறந்த பிறகும் பட்டியலில் இருப்பவர்கள்.
*2. விடுபட்ட உயிருள்ள இந்தியர் யாராவது உண்டா?*
இது தான் முக்கிய கேள்வி.
தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சொன்னது: *"Not a single affected party has complained" - பாதிக்கப்பட்ட ஒருவர் கூட புகார் கொடுக்கவில்லை.*
ஆனால் கள ஆய்வுகள் வேறு கதை சொல்கின்றன:
- *Pooja Devi, Delhi:* 20 வருடமாக Kalkaji-ல் வசிக்கிறார், 2025-ல் ஓட்டு போட்டார், ஆனால் படிவமே கொடுக்காமல் பெயர் நீக்கம். டெல்லியில் இது போல 13.39 லட்சம் பேர்.
- *CPI(ML) Survey, Bihar:* Agiaon-ல் 2,137 பேர், Ziradei-யில் 3,489 பேர் வீட்டில் உயிரோடு இருந்தும் பெயர் நீக்கம்.
ஆனால் இதுவரை ஒருவர் கூட SC-யில் Affidavit கொடுத்து "நான் உயிரோடு இருக்கிறேன், என் பெயர் நீக்கப்பட்டது" என்று சொல்லவில்லை. அதனால் தான் SC, Bihar SLSA மூலம் வீடு தேடி சென்று உதவ உத்தரவிட்டது.
*3. அவர்கள் எந்த நாட்டு அடையாளம்?*
நீக்கப்பட்டவர்களுக்கு எந்த வெளிநாட்டு அடையாளமும் இல்லை. அவர்கள் இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள் தான். ஆனால் *இந்திய குடியுரிமையை நிரூபிக்க 11 ஆவணங்களில் (பாஸ்போர்ட், பிறப்பு சான்று, 2003 பட்டியல்) ஒன்றை கூட கொடுக்காதவர்கள்.*
ஆதார் அடையாள சான்று மட்டும், குடியுரிமை சான்று அல்ல என்பது தான் SC-யின் நிலை. அதனால் ஆவணம் இல்லாத ஏழை இந்தியனும், ஆவணம் இல்லாத சந்தேக நபரும் ஒரே பட்டியலில் சிக்குகிறார்கள்.
*4. தீர்வு என்ன?*
- *தனிநபருக்கு:* http://voters.eci.gov.in-ல் செக் செய்து Form 6 போடுங்கள். ஆதாரை 12வது ஆவணமாக SC ஏற்றுள்ளது. DM/SDM அலுவலகத்தில் Appeal செய்யலாம்.
- *அரசுக்கு:* நீக்கப்பட்டவர் பட்டியலை EPIC எண்ணுடன் வெளிப்படையாக வெளியிட வேண்டும், கிராம சபை மூலம் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்.
- *அரசியலுக்கு:* En masse exclusion அல்ல, En masse inclusion - SC சொன்ன பொன்மொழி. சந்தேகம் இருந்தால் சேர்க்க வேண்டும், நீக்கக்கூடாது.
*5. சிறப்பு அறிவிப்பு - தருமி பரிசு போல ரூ.1000 பரிசு!*
இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க *பப்ளிக் ஜஸ்டிஸ்* சார்பில் ஒரு அறிவிப்பு:
> *SIR-ல் பெயர் நீக்கப்பட்ட உயிருள்ள உண்மை இந்திய குடிமகன் ஒருவரை ஆதாரத்துடன் அடையாளம் காட்டும் நபருக்கு ரூ.1000 பரிசுத்தொகை!*
திருவிளையாடலில் தருமி பாட்டில் குற்றம் சொன்ன நக்கீரர் போல, SIR-ல் குற்றம் இருந்தால் ஆதாரத்துடன் காட்டுங்கள். சிவனே எழுதிய பாட்டு போல SIR சரியாக இருந்தால், ஒரு உண்மை வாக்காளரை கூட உங்களால் காட்ட முடியாது.
உண்மை வாக்காளராக இருந்தால் Form 6 போட நாங்களே உதவுவோம்.
*ஒரு உண்மை வாக்காளர் கூட விடுபடக்கூடாது, ஒரு போலி வாக்காளர் கூட சேரக்கூடாது - இது தான் தேசியம்.*
அதுவே ஜனநாயக சமூக நீதி அது சமநீதியானால் அதுவே பொதுநீதி.
---











கருத்துகள்