_காவலனா? காமக் கொடூரனா? - பெண் போலீஸ் வழக்கில் 7 பிரிவுகளில் FIR_
பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரியே, தன் கீழ் பணியாற்றிய பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
_ நடந்தது என்ன?_
காரைக்காலில் 2024-ல் SP-யாக இருந்தவர் _A.சுப்பிரமணியன்_. அவரது கீழ் பணியாற்றிய 28 வயது பெண் காவலருக்கு குறுஞ்செய்திகள், நள்ளிரவு வீடியோ கால்கள் மூலம் தொல்லை கொடுத்ததாக புகார்.
பெண்ணின் கணவர் சீனியர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததால் SP புதுச்சேரிக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் தொல்லை தொடர்ந்ததால் பெண் காவலர் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
_சொகுசு ஹோட்டலில் சிக்கிய இன்ஸ்பெக்டர்:_
13.10.2025 அன்று காரைக்கால் சொகுசு ஓட்டலில் _அறை எண் 103-ஐ இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தன் பெயரில் புக் செய்து SP-க்கு உடந்தையாக இருந்தது_ விசாரணையில் தெரியவந்துள்ளது.
_உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகே FIR:_
இதுதான் முக்கியம். சீனியர் SP நித்யா தலைமையிலான விசாகா குழு குற்றச்சாட்டு உண்மை என அறிக்கை கொடுத்தும் புதுச்சேரி போலீஸ் FIR போடவில்லை.
பாதிக்கப்பட்ட நபரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றம் சென்றார். நீதிபதி லட்சுமிநாராயணன் _“புதுச்சேரி போலீஸ் கும்பகர்ண தூக்கத்தில் உள்ளதா? குற்றம் சாட்டப்பட்டவரை பாதுகாக்கிறீர்களா?”_ என கண்டித்த பிறகே, 29.09.2025 அன்று காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் FIR பதிவானது.
_ 7 கடுமையான சட்டப் பிரிவுகள்:_
1. BNS 64(2) - பதவியை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை (10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை)
2. BNS 75 - பாலியல் தொல்லை
3. BNS 79 - பெண்ணின் மானத்திற்கு பங்கம்
4. BNS 118(1) - காயம் ஏற்படுத்துதல்
5. BNS 308(6) - மிரட்டி பணம் பறித்தல்
6. BNS 351(3) - கொலை மிரட்டல்
7. IT Act 67A - ஆபாசமாக சித்தரிக்கும் பொருட்களை பரப்புதல்
_தற்போது:_ SP சுப்பிரமணியன் Suspend செய்யப்பட்டுள்ளார். FIR போட்டு 26 நாட்களுக்கு மேலும் கைது செய்யப்படாமல் உள்ளார். முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல்.
> IPS படித்து நியாயம் காக்க வேண்டியவரே இப்படி நடந்துகொண்டது காவல்துறை மீதான நம்பிக்கையை குலைத்துள்ளது.-

கருத்துகள்