Truecallerக்கு குட்பை! இனி தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தாலும் பெயர் தெரியும் - மத்திய அரசு அதிரடி!*
தினம் தினம் தெரியாத நம்பரில் இருந்து வரும் Spam அழைப்புகளால் பொதுமக்கள் படும் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய தொலைத்தொடர்பு துறை (DoT) நவம்பர் 1 முதல் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வருகிறது. அதன் பெயர் தான் *CNAP - Calling Name Presentation.*
அக்டோபர் 13-ம் தேதி வெளியான அரசாணையின்படி, இனி Jio, Airtel, Vi, BSNL உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் பெயரை காட்ட வேண்டும் என்பது கட்டாயம்.
*எப்படி வேலை செய்யும்?*
1. உங்கள் போனில் சேவ் செய்யப்பட்ட நம்பர் என்றால், நீங்கள் சேவ் செய்த பெயரே தெரியும்.
2. சேவ் செய்யாத புதிய நம்பர் என்றால், அந்த நம்பர் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த உண்மையான பெயர் திரையில் தெரியும்.
3. வெளிநாட்டு அழைப்பு என்றால், "International Call" என்று காட்டும்.
இது 4G மற்றும் 5G நெட்வொர்க்கில் முதலில் அமலுக்கு வருகிறது. 2G, 3G மற்றும் லேண்ட்லைனுக்கு பின்னர் விரிவுபடுத்தப்படும்.
*Truecallerக்கு இனி வேலை இல்லையா?*
இத்தனை நாள் நாம் யார் கூப்பிடுகிறார்கள் என்று தெரிய Truecaller போன்ற செயலிகளை நம்பி இருந்தோம். இனி அரசாங்கமே, தொலைபேசி நிறுவனத்தின் மூலம் நேரடியாக பெயரை காட்டுவதால், மோசடி அழைப்புகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இதற்காக அழைப்பு முடிந்ததும் பெயரை நிறுவனங்கள் அழித்துவிட வேண்டும் என்ற பாதுகாப்பு விதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.
*வணிக நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடு:*
போலி பெயரில் வணிக அழைப்பு செய்ய முடியாது. ஒரு நிறுவனம் தனது பிராண்ட் பெயரை காட்ட வேண்டும் என்றால், அது Trade Marks Registry அல்லது GSTயில் பதிவு செய்யப்பட்ட பெயராக இருக்க வேண்டும்.
மகிஷாசுரனை துர்கா தேவி அழித்தது போல், Spam அசுரனை இந்த CNAP திட்டம் அழிக்கும். இது தான் உண்மையான *பொது நீதி !* ---




கருத்துகள்