--- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் SSR 2027 அட்டவணை வெளியீடு - தகுதி நாள் 01.01.2027 - CEO அர்ச்சனா பட்நாயக் கடிதம்*
*சென்னை:* தமிழ்நாட்டில் புகைப்பட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் Special Summary Revision with reference to 01.01.2027 நடத்துவதற்கான அட்டவணையை தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
*கடித விவரம்:* Letter No. *23500/Ele-I/2026-2*, Dated *16.10.2026* - அனுப்பியவர்: *திருமதி. அர்ச்சனா பட்நாயக், IAS, தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு.*
*யாருக்கு அனுப்பப்பட்டது?* தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கும்.
*தேர்தல் ஆணையத்தின் கடிதம்:* ECI Letter No. 23/2026-ERS/Vol.II dated 24.09.2026-ன் அடிப்படையில் இந்த SSR நடக்கிறது.
*முழு கால அட்டவணை:*
- *02.11.2026-க்குள்:* வாக்குச்சாவடிகள் பகுத்தறிதல் (Rationalization) முடிக்கப்பட வேண்டும்
- *12.11.2026:* வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (Draft Publication)
- *12.11.2026 முதல் 11.12.2026 வரை:* பொதுமக்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த கோரல் மற்றும் ஆட்சேபனை மனு அளிக்கும் காலம் (Claims & Objections)
- *28.12.2026-க்குள்:* அனைத்து மனுக்கள் மீதும் முடிவு (Disposal)
- *04.01.2027:* இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு (Final Publication)
*பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?* 18 வயது நிரம்பியவர்கள் (01.01.2027 அன்று) தங்கள் பெயரை சேர்க்க Form-6 மூலம் BLO-விடம் அல்லது Voter Helpline App / http://voters.eci.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்


கருத்துகள்