*ஸ்ரீரங்கம் திருவரங்கம் ஆன கதை... முகேஷ் பாலா முகேசு பாலா ஆன வேதனை!* சிறப்பு செய்தி : ரெங்கநாதன் திருப்பதி
*தமிழ் எழுத்து சீர்திருத்தம் - மொழிக் கலையா? அடையாள அழிப்பா? - மாநில அரசாணை Vs மத்திய உரிமை*
தமிழ் எழுத்து சீர்திருத்தம் - மொழிக் கலையா? மொழிக் கொலையா? இலக்கணப் பிழையா?சாமானியனுக்கு ஒரு நீதி, அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதியா? என்ற விவாதம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது. ஜாதியை- சாதியாகவும், ஜனவரியை- சனவரியாகவும், ஜன்னலை- சன்னலாகவும் எழுத வைத்தது சரியா என்ற கேள்வியும், முகேஷ் பாலா என்ற மாணவனின் பெயரை முகேசு பாலா என எழுத வலியுறுத்தி மறுத்த காரணத்தால் அரசிதழ் ஆங்கிலத்தில் மட்டும் வந்து ரூபாய் .750 கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவமும் இந்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.
*சம்பவம் என்ன?*
மாணவர் *முகேஷ் பாலா*. இவரது பெயரில் உள்ள 'ஷ்' என்பது கிரந்த எழுத்து என்பதால் தமிழ் அரசிதழில் வெளியிட முடியாது, 'முகேசு பாலா' என்றே எழுதி இருக்க வேண்டும் என தமிழ்நாடு எழுதுபொருள் அச்சுத்துறை அலுவலகம் கூறியது. மாணவர் தந்தை மறுக்கவே, "தமிழில் இல்லை" எனக்கூறி அரசிதழை ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டு, திருத்தத்திற்கு ரூபாய் .750 கட்டணம் வசூலிக்கப்பட்டது. *இது தான் எழுவினா: ஒரு தமிழன் தன் பெயரை உச்சரிப்புடன் அழுத்தமாக எழுதக்கூடாதா?*
*வரலாற்று பின்னணி - பெரியார் என திக வினரால் அழைக்கப்படும் ஈ. வே. ராமசாமி செய்தது என்ன?*
1934-ல் அவரது 'குடி அரசு' தனியார் இதழில் 13 எழுத்துக்களை அவரது வசதிக்காக சீர்திருத்தினார். அச்சுக்கோர்ப்பு எளிதாக வேண்டும் என்பதற்காக லை, ளை, னை, ணா, றா, னொ, ணொ, னோ, ணோ, றொ, றோ வடிவங்களை மாற்றினார். பின்னர் *19.10.1978 அரசாணை எண் 1875* மூலம் அப்போதய முதல்ராக இருந்த எம்.ஜி.ஆர் அரசு இதை அதிகாரப்பூர்வமாக்கியது. *ஆனால் ஜ, ஷ, ஸ, ஹ போன்ற கிரந்த எழுத்துக்களை நீக்கியது ஈ. வே. ரா அல்ல, 20-ம் நூற்றாண்டின் தூய தமிழ் இயக்கமே.* அதில் ஜனவரி- சனவரி ஆனது, ஜாதி- சாதி ஆனது.
*தொல்காப்பியம், மன்னர் ஸ்ரீ ராஜராஜன் சொல்வது என்ன?*
2000 ஆண்டு பழமையான தொல்காப்பியம் "வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ" என்கிறது. அதாவது வடமொழி சொல்லை தமிழ் எழுத்தில் எழுதுக என்பது பொருள். ஆனால் அதே நூலில் "சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்" என பிற மொழி சொல் சிதையாமல் ஏற்கலாம் எனவும் கூறுகிறது. கிரந்த எழுத்துக்கள் பொது ஆண்டு 7-ம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ளது தொல்லியல் ஆதாரம்.
*நம்மை ஆண்ட ஸ்ரீ ராஜராஜ சோழச் சக்கரவர்த்தி* தன் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டை *"ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியும்..."* என்றே தொடங்கினார். அவர் ஸ்ரீ என்ற கிரந்தத்தை தடை செய்யவில்லை. அவர் தான் முதன்முதலில் *மெய்க்கீர்த்தி* என்ற வழக்கத்தை கொண்டு வந்து, செப்பேடுகளில் சமஸ்கிருதத்திற்கு கிரந்தம், தமிழுக்கு தமிழ் என பிரித்து மணிப்பிரவாளம் என வாழ வைத்தார்.
*ஸ்ரீரங்கம் திருவரங்கம் ஆன கதை தான் உச்சம்:*
ஆழ்வார்கள் பாடியது, சோழர்கள் கல்வெட்டில் எழுதியது *ஸ்ரீரங்கம்*. அது தான் ரயில்வே நிலையத்தில் இன்றும் SRIRANGAM என உள்ளது. அரசு பாடநூலில் மட்டும் அது *திருவரங்கம்*. ஸ்ரீ என்பதை திரு என மொழி பெயர்த்தது தூய தமிழ். இரண்டும் சரி தான். ஆனால் அதை கட்டாயமாக்குவது தான் சிக்கல். ஸ்ரீரங்கம் கோவிலில் மதுரை பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தங்க விமானத்திற்கு கிரந்தத்தில் பொறித்த கல்வெட்டுகள் இன்றும் உள்ளன.
*எழுத்தை மாற்ற அவர்களுக்கு அதிகாரம் உண்டா? மத்திய சட்டம் அதைத் தடுக்காதா?*
*பதில்: அதிகாரம் உண்டு, ஆனால் வரம்புக்கு உட்பட்டது தான். மத்திய சட்டம் நிச்சயம் தடுக்கும்.*
1. *மாநில அதிகாரம் (பிரிவு 345):* ஆட்சி மொழியை, எழுத்து வடிவத்தை சீராக்கும் அதிகாரம் உண்டு. G.O.1875 அந்த அதிகாரத்தில் வந்தது தான். ஆனால் அது வடிவத்தை எளிமைப்படுத்த மட்டுமே. பெயரை மாற்ற அல்ல.
2. *மத்திய சட்டம் தடுக்கும் 4 இடங்கள்:*
*அ) பிரிவு 19(1)(a) & 21:* பெயரை உச்சரிப்பது போல எழுதுவது அடிப்படை உரிமை. ஷ் என்பதை சு என மாற்றுவது உரிமை மீறல் - *Jigya Yadav vs CBSE 2021* தீர்ப்பு.
*ஆ) பிரிவு 29(1):* மொழி, எழுத்தை பாதுகாக்கும் உரிமை.
*இ) கெஜட் விதிகள் 1960 & பாஸ்போர்ட் விதிகள் 1980:* பெயரை Transliterate செய்ய வேண்டும், Translate செய்யக்கூடாது. Joseph-ஐ சோசப் என்பது பிழை, ஜோசப் தான் சரி.
*ஈ) Unicode அனுமதி:* தமிழில் கிரந்த எழுத்துக்கள் ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ இன்றும் Unicode-ல் உள்ளன.
*சாமானியனுக்கு ஒரு நீதியா?* தமிழ்நாடு முன்னாள் முதல்வர்களாக இருந்த செல்வி ஜெ.
ஜெயலலிதா, மு. க. ஸ்டாலின், தற்போதய முதல்வர் சி.ஜோசப் விஜய் போன்ற பெயர்கள் அரசியல் காரணமாக ஜெயலலிதா, , ஸ்டாலின் என்றே எழுதப்படுகின்றன. ஆனால்12 ஆம் வகுப்பு மாணவன் முகேஷ் பாலா மட்டும் முகேசு பாலா என ஏன் தமிழ் அரசிதழில் ஆகிறான். இலங்கை தமிழில் இன்றும் ஜனவரி, ஜன்னல் என்றே எழுதப்படுகிறது.
*தீர்வு - இரட்டை கொள்கை வேண்டும்:*
தமிழ் சொற்களுக்கு - பெரியார் ஈ. வே. ரா எழுத்து. பிற மொழி பெயர், ஊர், மாதத்திற்கு - கிரந்த எழுத்தை அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் சட்டம் அனைவருக்கும் சமம் என்பது கேள்விக்குறியாகும்.
*மத்திய அரசிடம் இருந்து 30 நாளில் தீர்வு:* (1) http://governor.tn.gov.in-ல் ஆளுநருக்கு மனு, (2) ol-dept@nic.in-ல் மத்திய உள்துறைக்கு புகார், (3) http://nhrc.nic.in-ல் மனித உரிமை புகார், (4) Article 226-ல் ரிட் மனு. என RTI ET7x91xxxxxIN மூலம் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
---




கருத்துகள்