முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புனர்பூசத்தில் ஆஞ்சநேயர் லீலை, உச்ச நீதிமன்றத்தின் நீதி வென்ற கதை

 *திருப்பரங்குன்றம்: தீபத்தூணில் மீண்டும் ஒளிர்ந்த கார்த்திகை ஜோதி - புனர்பூசத்தில் ஆஞ்சநேயர் லீலை, உச்ச நீதிமன்றத்தின் நீதி வென்ற கதை*

*1. திருப்பரங்குன்றம் - முதல் படை வீடு*

மதுரையில் இருந்து தென்மேற்கே 8 கி.மீ. மலையே சிவலிங்க வடிவம். திரு + பரம் + குன்றம் = பரம்பொருளான சிவனின் புனித மலை. பழைய பெயர்கள் - தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், பரங்கிரி, சத்யகிரி, கந்தமலை, ஸ்கந்தமலை.

*2. கால வரிசை - 2300 வருஷம்*

- கி.மு. 200 - சமணர் படுகைகள், கற்படுக்கைகள், மேல் குகையில் தமிழி கல்வெட்டு “அந்துவன் கொடுபிதவன்”

- 2023-ல் கண்டுபிடிக்கப்பட்ட 5 படுக்கை குகை கல்வெட்டு கி.மு. 2-ம் நூற்றாண்டு




- சங்க காலம் - திருமுருகாற்றுப்படை, அகநானூறு, பரிபாடல், நற்றிணை, மதுரைக்காஞ்சியில் முருகன் குன்றம்

- கி.பி. 773 - பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலம், படைத்தலைவன் சாத்தன் கணபதி குடைவரை கோயில் உருவாக்கினான். ஆரம்பத்தில் சிவன் கோயில். சிவன், விஷ்ணு, விநாயகர், துர்க்கை, முருகன் - பஞ்சாயதன கோயில்

- கி.பி. 7-ம் நூற்றாண்டு - திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

- கி.பி. 10-ம் நூற்றாண்டு - சிக்கந்தர் தர்கா பின்புறம் “அரிட்டநேமிபடாரர் நிசிதிகை இது”

- கி.பி. 1216-1239 - மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு “திருப்பரங்குன்றம் உடைய நாயனார்”

- கி.பி. 12-ம் நூற்றாண்டு முதல் - முருகன் கோயிலாக மாறியது




- 16-ம் நூற்றாண்டு - விஜயநகரர் - நாயக்கர் காலம், 150 அடி 7 நிலை ராஜகோபுரம்

- 1334-1372 - மதுரை சுல்தான்கள், சிக்கந்தர் ஷா நினைவாக மலை உச்சியில் தர்கா

*3. புராணம்*

சூரபத்மனை வதம் செய்த முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையை இங்கு திருமணம் செய்து கொடுத்தான். பிரம்மா விவாக காரியங்கள் நடத்த, சூரிய சந்திரர்கள் ரத்ன தீபங்கள் ஏந்த, சிவன் - பார்வதி ஆசி வழங்க, திருமணம் நடந்தது. அதனால் தான் இங்கு மட்டும் முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

தைப்பூசம் கதை: கைலாயத்தில் சிவன் பார்வதிக்கு பிரணவ மந்திரம் உபதேசிக்கும் போது மடியில் இருந்த முருகனும் கேட்டுவிட்டார். முருகன் இங்கு வந்து தவம் செய்தார். தை மாத பூசத்தில் சிவன் - பார்வதி காட்சி கொடுத்து மன்னித்தனர்.




மகாபாரத தொடர்பு: பஞ்ச பாண்டவர்கள் தங்கிய குகைகளை இன்றும் பஞ்ச பாண்டவர் படுகை என்கிறார்கள்.

*4. திருப்பரங்குன்றம் திருப்பதிகம் - திருஞானசம்பந்தர், 7-ம் நூற்றாண்டு*

1. நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை சூடலன் அந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில் ஆடலனஞ்சொல் அணியிழையாளை ஒருபாகம் பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

2. அங்கமொராறும் அருமறை நான்கும் அருள் செய்து பொங்கு வெண்ணூலும் பொடியணி மார்பில் பொலிவித்துத் திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்தோர் தேன்மொழி பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

3. நீரிடங்கொண்ட நிமிர்சடை தன்மேல் நிரை கொன்றை சீரிடங்கொண்ட எம் இறைபோலும் சேய்தாய ஓருடம்புள்ளே உமை ஒருபாகம் உடனாகிப் பாரிடம்பாட இனிது உறை கோயில் பரங்குன்றே.




4. வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக் குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம் தளிர்போன்மேனித் தையல் நல்லாளோடு ஒரு பாகம் நளிர் பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.

5. பொன்னியல் கொன்றை பொறிகிளர் நாகம் புரிசடைத் துன்னிய சோதியாகிய ஈசன் தொன்மறை பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே.

6. கடைநெடுமாடக் கடியரண் மூன்றும் கனன்மூழ்கத் தொடை நவில்கின்ற வில்லினன் அந்திச் சுடுகானில் புடைநவில் பூதம் பாட நின்றாடும் பொருசூலப் படை நவில்வான்தன் நன்னகர் போலும் பரங்குன்றே.

7. அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால் எயில்பட எய்த எம்மிறைமேய இடம் போலும் மயில்பெடை புல்கி மாநடமாடும் வளர்சோலைப் பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.

8. மைத்தகுமேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள் பத்தின திண்தோள் இருபதும் செற்றான் பரங்குன்றைச் சித்தம் அது ஒன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று நித்தலும் ஏத்த தொல்வினை நம்மேல் நில்லாவே.

9. முந்தி இவ்வையம் தாவிய மாலும் மொய்யொளி உந்தியில் வந்து இங்கு அருமறை ஈந்த உரவோனும் சிந்தையினாலும் தெரிவரிதாகித் திகழ்சோதி பந்தியலங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே.

10. குண்டாய் முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய்யல்ல பண்டால் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத் தொண்டாலேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.

11. தடமலி பொய்கைச் சண்பைமன் ஞானசம்பந்தன் படமலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத் தொடைமலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர்போகி விடமலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே.

*5. தீபத் தூண் வெண்பா*

தீபம் ஏற்றத் துடிப்பதேன்? என்பார்க்கு தீபம் அன்று, அது தீரன் ஆவி பூபம் போற்றும் பூரண சந்திரன் தூணில் உறங்கும் தூய ஆன்மா.

வாளால் காத்தான், வளமாய் வாழ்ந்தான், தாளால் மண்ணைத் தாயெனப் போற்றினான், ஆளாய் வீழ்ந்தும் ஆவி தங்கினான், தூணில் நின்று தீபம் கேட்கின்றான்.

தீபம் எரியும் திருநாள் தன்னில், பாபம் களைந்து பரன் அடி சேர்வான், கூபம் நீங்கிக் குளிர்ந்து மகிழ்வான், மோட்சம் பெறுவான் முழு நிலவே.

குதிப்பு அன்று இது குருதித் தவம், துடிப்பு அன்று இது தூய பக்தி, தியாகம் வீணாய்ப் போகாது - என்றும் தீப ஒளியில் தீரன் வாழ்வான்.

*6. தீபத்தூண் ஆதாரம் - ஆஞ்சநேயர் சிற்பம்*

1981-ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட _திருப்பரங்குன்றம்_ நூல், பக்கம் 129:

> “மலை அடிவாரத்திலிருந்து மலைக்குச் சென்றால் பாதி வழியில் தீபத்தூண் ஒன்று இருப்பதைக் காணலாம். இந்தத் தூண் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. கல்வெட்டுக்கு மேல் அனுமன் ஒரு கையை ஓங்கிக் கொண்டு, முகத்தை இடது பக்கம் திரும்பிக் கொண்டிருக்கும் சிற்பமும் உள்ளது. இந்த தீபத்தூண் ஆண்டவனுடைய தலையின் உச்சியில் நாட்டப்பட்டிருப்பதாகவும், இதில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம் என்றும் அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.”

எந்த சர்வே தூணிலாவது ஆஞ்சநேயர் படம் அமையுமா?

*7. புனர்பூசம் - ஆஞ்சநேயர் லீலை*

தீபத்தூணில் மஹா ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பம் உள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் புனர்பூசம் நட்சத்திரத்தில் வந்தது. புனர்பூசம் - ஸ்ரீ ராமபிரான் ஜனன நட்சத்திரம். புனர்பூசத்தில், ஆஞ்சநேயர் சிற்பம் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இது ஆஞ்சநேயர் லீலை என்றே பக்தர்கள் கருதுகின்றனர். தீபமேற்றும் விழாவில் பங்கேற்க ஒரு லட்சம் பேருக்கு பாஜ மற்றும் இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

*8. சட்ட அடிப்படை*

- அரசியலமைப்பு சட்டம் பிரிவு 129, 142: உச்ச நீதிமன்றம் அவமதிப்புக்கு தண்டிக்கவும், முழுமையான நீதி வழங்கவும் அதிகாரம் பெற்றது.

- நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971, பிரிவு 2(b) மற்றும் 12: உத்தரவை வேண்டுமென்றே மீறுவது சிவில் அவமதிப்பு.

- உரிமையியல் நடைமுறை சட்டம், Order XL Rule 1: நிர்வாகம் சரியில்லை என்றால் Receiver நியமிக்கலாம்.

*9. வெற்றி நாயகன் - சாய் தீபக்*

இன்றைய கார்த்திகை தீபத்தின் வெற்றி நாயகன் ஸ்ரீ சாய் தீபக் அவர்கள். INA-வில் லெஃப்டினென்ட் ஆக தியாகப் பணி ஆற்றிய ஸ்ரீ மாதவன் பிள்ளை அவர்களுடன் அவர் இருக்கும் படம் பக்தர்களிடம் பரவியது. ராமசுப்பு என்ற மனுதாரருக்காக ஆஜரானார். அவருடன் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அவர்களும் சிறப்பாக வாதாடினார்.

*10. நவம்பர் . 20 இடைக்கால உத்தரவு*

நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி. “எந்த உரிமையையும், வழக்கத்தையும் அங்கீகரிக்காமல், தற்காலிக ஏற்பாடாக, ஒருமுறை மட்டும்” நவ. 24-ல் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி. தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு மட்டும் ஏற்ற வேண்டும். மதுரை ஆட்சியர் Nodal Officer.

*11. நவம்பர் . 24 - உத்தரவு நிறைவேறவில்லை*

அறங்காவலர் குழு Resolution No. 1 போட்டு, ஆகம விதிப்படி வழக்கமான இடத்திலேயே தீபம் என்று முடிவு. மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மட்டும் மகா தீபம். தீபத்தூணில் ஏற்றப்படவில்லை.

*12. நவ. 25 FIR 364/2026*

திருப்பரங்குன்றம் PS. பிரிவுகள் 189(2), 126(2), 292 BNS. சம்பவம் மாலை 6.15, பதிவு இரவு 7.15. புகார்: சார்பு ஆய்வாளர் சிவப்பிரகாசம். குற்றம் சாட்டப்பட்டவர்கள்: ராமலிங்கம் - அகில பாரத அனுமன் சேனா தலைவர், வெற்றிவேல் முருகன், சரவணக்குமார், ராஜேஷ், அருண் - BJP. FIR-ல் சட்டவிரோதமாக ஒன்று கூடி, போக்குவரத்துக்கு இடையூறு, தீபத்தூணில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் என எழுதப்பட்டுள்ளதாக தகவல். Arrest on Bail. இது கொலை, அடிதடி வழக்கு இல்லை.

*13. மதுரை ஆட்சியர் மன்னிப்பு - 17 பக்க அறிக்கை*

மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா 3 நாட்கள் அவகாசம் இருந்தும் உடனே மன்னிப்பு கேட்டு 17 பக்க அறிக்கை தாக்கல் செய்தார்.

- நவ. 20-க்கு பிறகு வருவாய்த் துறையுடன் முதல் கூட்டம்.

- நவ. 21-ல் அறநிலையத் துறை ஆணையர் உத்தரவை ஆட்சியருக்கும், செயல் அலுவலருக்கும் அனுப்பினார். அன்று இரவு 7 முதல் 9 மணி வரை ஒருங்கிணைப்பு கூட்டம்.

- நவ. 24 மாலை 6 - 6.30-க்குள் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10 பேர் குழுவால் தீபம். வருவாய், காவல், தீயணைப்பு, தொல்லியல் துறையில் இருந்து தலா ஒரு பார்வையாளர்.

- நவ. 22-ல் கோயில் முன்மொழிவு, பாதுகாப்பு திட்டம், 3-வது கூட்டம்.

- அடிவாரத்தில் இருந்து உச்சி வரை தற்காலிக மின் விளக்குகள், நவ. 24 காலை 6 மணிக்கு 27 பேர் முன்னேற்பாட்டு குழு, பிற்பகல் 2 மணிக்கு 2 ஸ்தானீகர்கள், அறங்காவலர் குழு தலைவர், கண்காணிப்பாளர், தலைமை எழுத்தர், தொழில்நுட்ப உதவியாளர், பேஷ்கார், அலுவலக உதவியாளர், 2 தீப வல்லுநர்கள் - 10 பேர் குழு.

- பாதுகாப்பு திட்டம் - 5,797 காவலர்கள்.

- நவ. 23-ல் 3-வது கூட்டம். நவ. 23 இரவு 9 மணி முதல் நவ. 25 காலை 10 மணி வரை கூட்டம், போராட்டம், ஊர்வலம், மலை ஏறுதல் - BNSS 163 தடை.

- நவ. 24 காலை 9.30 - 12.30 காவல் ஆணையர் அலுவலக ஆலோசனை, மலையில் நேரில் ஆய்வு. காலை 11.30-க்கு 10 பேருக்கு அறங்காவலர் குழு ஒப்புதல் கோரப்பட்டது.

- பிற்பகல் 3.47 நினைவூட்டல் கடிதம், மாலை 5.03 ஆட்சியர் மின்னஞ்சல் - அனைத்தும் தயார், உடனடியாக தீபம் ஏற்றுங்கள்.

- ஆனால் அங்கீகரிக்கப்பட்ட குழு வரவில்லை, நேர நீட்டிப்பும் கோரவில்லை. இரவு 7.32 கோயில் செய்திக்குறிப்பு. இரவு 8.30 செயல் அலுவலர் அறிக்கை - “அறங்காவலர் குழு தீர்மானப்படி வழக்கமான இடத்திலேயே தீபம்.”

- தேவஸ்தானம் அங்கீகரிக்கும் நபருக்கு பதிலாக வேறு யாரையும் அங்கீகரிக்கும் அதிகாரம் ஆட்சியருக்கு இல்லை. அதனால் தீபத்தூணில் ஏற்ற முடியவில்லை. வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருகிறேன்.

*14. ஆளுநர் கடிதம்*

தமிழக ஆளுநர் *திரு. ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர்* அவர்கள், நவ. 25 அன்று உச்ச நீதிமன்ற நவ. 20 உத்தரவு நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து விரிவான அறிக்கை கேட்டு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு கடிதம் அனுப்பினார்.

*15. நவம்பர் . 27 இரண்டாவது உத்தரவு*

நவ. 20 உத்தரவு “wilful and flagrant disobedience” - வேண்டுமென்றே மீறப்பட்டது என்று நீதிமன்றம் கூறியது.

- அறங்காவலர் குழு இடைநீக்கம் / Supersede

- ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் Joint Receivers. உடனடியாக பொறுப்பேற்க உத்தரவு.

- மலை முழுவதும், கோயில் + தர்கா பாதுகாப்பு CRPF-யிடம். மதுரை போலீஸ் மலையை சுற்றி மட்டும்.

- நவ. 28-ல் தீபத்தூணில் தீபம். நவ. 24 ஜோதி இருந்தால் அதை கொண்டு, இல்லையென்றால் புதிதாக.

- இனி குறிப்பிட்ட குழு மட்டும் இல்லை, எல்லா பக்தர்களும் தீபம் ஏற்றலாம், ஆனால் தர்காவில் இருந்து 50 மீட்டர் இடைவெளியில் தான்.

- தர்கா வழிபாட்டுக்கு இடையூறு கூடாது, தர்கா பக்தர்களை தடுக்க கூடாது.

- நவ. 20 Stay நீக்கம்.

- தலைமைச் செயலாளர், டிஜிபி, மதுரை ஆட்சியர் உட்பட 15 பேருக்கு அவமதிப்பு நோட்டீஸ். டிசம்பர் . 15-ல் நேரில் ஆஜர்.

- இந்து அமைப்புகள் சார்பில் அவமதிப்பு மனு தாக்கல். விசாரணை நிலுவையில் உள்ளது.

*16. நவம்பர் . 28 - நிறைவேற்றம்*

- *CRPF வருகை:* உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முதல்கட்டமாக நவ. 27 இரவு கோவையில் இருந்து CRPF அதிவிரைவு படை கமாண்டண்ட் சுனில்குமார் தலைமையில் திருப்பரங்குன்றம் வந்தது. தனக்கன்குளம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். காலையில் மலைக்கு சென்று பாதுகாப்பு ஆய்வு செய்து, மலை மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 100-க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள்.

- *சிறப்புத் தொழுகை:* கேரளாவைச் சேர்ந்த 120 பேர் 4 பஸ்களில் வந்தனர். மலையில் உள்ள தர்காவுக்கு காலை 6 மணிக்கு சென்று சிறப்புத் தொழுகை நடத்தினர். பின்னர் 8.30 மணியளவில் மலையடிவாரம் வந்தடைந்தனர். CRPF அவர்களை தடுக்கவில்லை.

- *Receivers அறிவிப்பு:* 50 அடையாளம் காணப்பட்ட பக்தர்கள் மட்டும் மதியம் 2.30 - 3 மணிக்குள் மலை ஏற அனுமதி. சடங்கு *மாலை சரியாக 5 மணிக்கு*. பாதுகாப்பு பணியாளர்கள், கோயில் ஊழியர்கள் தவிர வேறு பொதுமக்கள் மலை ஏற அனுமதி இல்லை.

- *தீபம்:* கல்தூணில் தீபம் ஏற்றப்படுவதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் சாலை தடுப்புகளில் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபாடு. CRPF-க்கு மலர்தூவி வரவேற்பு. Vijayabharatham Digital - Modi பதிவு Repost - Vetrivel Muruganukku Arogara! *மாலை சரியாக 5 மணிக்கு தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.*

*17. முடிவு*

சர்வே தூண் என்பது கடவுள் மறுப்பு நபர்கள் கிளப்பிய வதந்தி. ஆஞ்சநேயர் சிற்பம் உள்ள தூணை சர்வே தூண் என்று சொல்வது வரலாற்றை திரிப்பது.

எந்த ஆதாரமும் இல்லாமல், வெறும் வதந்தியை வைத்து, தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியது அபத்தமான செயல்.

ஆதாரம் உள்ளது - கல்வெட்டு உள்ளது, ஆஞ்சநேயர் சிற்பம் உள்ளது, 1981 அரசு நூல் உள்ளது, திருஞானசம்பந்தர் திருப்பதிகம் உள்ளது, உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது.

*ஆதாரம் இல்லாமல் சில அரசியல் வியாதிகள் கூறலாம். நாம் கூறக்கூடாது. நாம் உண்மை மட்டுமே கூற வேண்டும்.*

*வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...