முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக திரு ராஜேஷ் பிந்தால் நியமனம்

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்  கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக திரு ராஜேஷ் பிந்தால் நியமனம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த திரு தோத்தாதில் பாஸ்கரன் நாயர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி திரு ராஜேஷ் பிந்தால் தலைமை நீதிபதியாக 2021 ஏப்ரல் 29ம் தேதி முதல் பணியாற்ற குடியரசுத் தலைவர், அரசியல் சாசனத்தின் 223 வது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி நியமனம் செய்துள்ளார்.  இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை இன்று வெளியிட்டுள்ளது. நீதிபதி திரு ராஜேஷ் பிந்தால், பி.காம். எல்எல்.பி கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், வரிவிதிப்பு, அரசியல் சாசனம், சிவில் மற்றும் அரசு வழக்குகளில் இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். வரிவிதிப்பு விஷயங்களில் இவர் நிபுணத்துவம் பெற்றவர். வருமானவரித்துறை மற்றும் மத்திய, மாநில அரசு அமைப்புகளில் இவர் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு ம...

குஜராத்தி கவிஞர் தாதுதன் கத்வி மற்றும் ஒடியா இலக்கியவாதி மனோஜ் தாஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

குஜராத்தி கவிஞர் தாதுதன் கத்வி மறைவுக்கு பிரதமர் இரங்கல் பிரபல குஜராத்தி  கவிஞர் பத்ம ஸ்ரீ தாதுதன் கத்வி மறைவுக்கு, பிரதமர்  திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘நாட்டுப்புற இலக்கியத்துறையில் கவிஞர் தத் பாபுவின் பங்களிப்பு எப்போதும் நினைவுக் கூறப்படும்.  மறைந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.                                            மேலும்  பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்  திரு.மனோஜ் தாஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் பிரதமர் திரு.நரேந்திர மோடி, சிறந்த கல்வியாளரும். பிரபலமான எழுத்தாளருமான திரு.மனோஜ் தாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “திரு.மனோஜ் தாஸ் சிறந்த கல்வியாளரும், புகழ்பெற்ற எழுத்தாளரும் ஆவார். அவர் ஆங்கில மற்றும் ஒடியா இலக்கியத்திற்கு அரும்பங்காற்றியுள்ளார். திரு.அரவிந்தரின் தத்துவத்தை கடைபிடித்து முன்னிலைப்படுத்தின...

நடிகை விந்தியா மரணமென கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிக்கு பதில்

தேர்தல் பிரச்சாரம் மூலம் தீவிரமாக செயல்பட்ட1990 களில் நடிகை விந்தியா மரணமென கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி. 1990 களில் சினிமாவுக்கு வந்தவர், கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகை விந்தியா. தமிழில் முதல் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘சங்கமம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன .வழக்கம் போலவே பெரிய  படவாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தவுடன், கிடைக்கும் படங்கள் எல்லாம் நடிக்கத் தொடங்கி ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.  சங்கமம் படத்திற்கு பின்னர், திருநெல்வேலி, மகளிர்காக கண்ணுக்கு கண்ணாக போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவே இவரை மறந்து  விட, 2008 ஆம் ஆண்டு நடிகை பானு ப்ரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட விந்தியா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். வாழ்க்கை சரியாக அமையாத  காரணத்தால், கணவன் மனைவி  இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  2012 ஆம்...

150 டன்கள் திரவ ஆக்சிஜனை 2021 ஏப்ரல் 25 வரை இந்திய ரயில்வே எடுத்துச் சென்றுள்ளது.

இரயில்வே அமைச்சகம்    முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை வந்தடைந்தது மூன்று டேங்கர்களில் திரவ மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள ஹாப்பாவில் இருந்து 2021 ஏப்ரல் 25 அன்று மாலை 6.03 மணிக்கு கிளம்பிய ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், மகாராஷ்டிராவில் உள்ள கலம்பொலியை 2021 ஏப்ரல் 26 காலை 11:25 மணிக்கு வந்தடைந்தது. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் வேகமாக வந்தடைவதற்காக பசுமை வழித்தட வசதி வழங்கப்பட்டது. ரயில்வே அமைச்சகத்தால் இயக்கப்படும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாக நாடு முழுவதும் உள்ள கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக மருத்துவ ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுகிறது. 860 கிலோமீட்டர்கள் பயணித்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் அதன் இலக்கை அடைந்தது. சுமார் 44 டன்கள் திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்த டேங்கர்கள் எடுத்து வந்தன. ஆக்சிஜன் எக்ஸ்பிரசுக்காக தேவையான ஏற்பாடுகள் கலம்பொலி சரக்குகள் மையத்தில் செய்யப்பட்டிருந்தன. விரம்காம், அகமதாபாத், வடோதரா, சூரத், வசாய் சாலை மற்றும் பிவாண்டி சாலை வழியாக அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் கலம்பொலியை வந்தடைந்தது. ஜாம் நகரில் உள்ள தி...

பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இயங்கும் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் கொவிட்-19 இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதாலும், தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளாலும், பிஎஸ்என்எல் சென்னை வட்டம் அதன் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின் பணியாளர் ஏற்பாடுகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.  இதைத் தொடர்ந்து, 2021 மே 1 முதல் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் ஒரு மணி வரை வாடிக்கையாளர் சேவை மையங்கள் இயங்கும். பிஎஸ்என்எல் சேவைகளுக்கும், தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் அலைபேசி போஸ்ட்பெய்டு கட்டணங்களை செலுத்துவதற்கும் ஆன்லைன் முறைகளை பயன்படுத்துமாறு பிஎஸ்என்எல் சென்னை வட்ட தலைமை பொதுமேலாளர் டாக்டர் வி கே சஞ்சீவி வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். கொவிட் வேகமாக பரவி வரும் நிலையிலும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், தொய்வில்லாத சேவைகளை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட தகவல்களை, பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் துணை...

கொவிட் மேலாண்மை குறித்து தொண்டு நிறுவனங்கள்/சமூக அமைப்புகளுடன் அதிகாரமளிக்கப்பட்ட குழு-3 ஆலோசனை

நித்தி ஆயோக் கொவிட் மேலாண்மை குறித்து தொண்டு நிறுவனங்கள்/சமூக அமைப்புகளுடன் அதிகாரமளிக்கப்பட்ட குழு-3 ஆலோசனை கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியாக, சமீபத்தில் அதிகரித்துள்ள கொவிட் தொற்றுகளின் பாதிப்பை கடந்து வருவதற்கான ஒருங்கிணைந்த யுக்திகளை வகுப்பதற்காக ஒரு கோடிக்கும் அதிகமான சமூக சமுதாய அமைப்புகளை நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழு-3 சென்றடைந்துள்ளது. இது குறித்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்/சமூக அமைப்புகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே விஜயராகவன், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் உறுப்பினர் திரு கமல் கிஷோர் மற்றும் வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அமைச்சரவை செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைத்தது, தடுப்புமருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை, இரண்டு மாதங்களுக்கு 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் சரக்கு...

சொந்த ஊரில் பத்மஸ்ரீ விவேக்கின் அஸ்தியை வைத்து குடும்பத்தினர் மரியாதை

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள தேவர் உறவின்முறை இடுகாட்டில் நடிகர் பத்மஸ்ரீ விவேக்கின் அஸ்தியை வைத்து அதற்கு குடும்பத்தினர் மரியாதை செய்தனர். அதன்பின்னர் அங்கு தோண்டப்பட்ட குழியில் விவேக்கின் அஸ்தியை வைத்து மலர் தூவி உறவினர்கள் அதன்மீது மரக்கன்றுகளை நட்டனர்.விவேக்கின் கனவே 1 கோடி மரங்களை நடுவது தான். இப்படி இருக்க அவரது அஸ்தியிலும் ஒரு பழம்மரக் கன்றை வைத்து அவரது ஆத்மாவை குளிர வைத்துள்ளனர் குடும்பத்தினர். திருநெல்வேலி பகுதியில்  அனைத்து ஜாதி மக்களும் மறவர்களை பாண்டியன் என அழைப்பது வழக்கம். பலர் முகநூலில் ஆதாரமே இல்லாமல் போலியான கதைகளை எழுதி வரும் சில ஜாதிகளும் இதற்கு விதி விலக்கல்ல. பாண்டியன் எனும் பெயரை பயன்படுத்தும் வழக்கம் மன்னர்கள் காலத்தில் பிற ஜாதிகளுக்கு அவை இருந்தில்லை இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திற்கு பிறகு சுதந்திரத்தின் வாயிலாக தைரியம் வந்திருக்க வேண்டும். பாணடியன் எனும் பெயர்களை தாங்கி நிற்கும் இந்திய தொல்லியல் துறை ஆதாரம் எதுவும் மறவர்கள் தவிர எவரிடமும் திருநெல்வேலி பகுதியில் இல்லை. திருநெல்வேலி மறவர்களின் நடிகர் விவேக் ...