முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஸ்ரீராமானுஜாச்சாரியாவின் ஜெயந்தி

ஸ்ரீராமானுஜாச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார் ஸ்ரீராமானுஜாச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது; “ஸ்ரீராமானுஜாச்சாரியாவுக்கு அவரது பிறந்த நாளில் நான் தலைவணங்குகிறேன். அவரது தெளிவான சிந்தனைகள் லட்சக்கணக்கானவர்களுக்கு  தொடர்ந்து பலத்தையும், ஞானத்தையும் வழங்குகிறது. நமது கலாச்சார வேர்களில் அவர் எப்போதும் பெருமிதம் கொண்டிருந்தார். நவீன மற்றும் இணக்கமான சமூகத்தை கட்டமைப்பதற்கும் பாடுபட்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.ஸ்ரீமதே இராமாநுஜாய நம: இன்று ஸ்வாமி இராமாநுஜரின் அவதார ஜெயந்தியான சித்திரை திருவாதிரை "மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள் செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச் சீமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே." ஓம் நமோ நாராயணா.

பயணிகளுக்காக இந்தியன் ரயில்வேயில் புதிய விதிகள்

இந்தியா முழுவதும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்காக இந்தியன் ரயில்வேயில் புதிய விதிகள் நிறுவப்பட்டுள்ளன. சரியான பொது நடத்தையை பராமரிக்க பயணிகள் கடைபிடிக்க வேண்டிய இரவு நேர விதிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளது.ரயிலில் பணிபுரிபவர்கள், TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே பணியாளர்களும் இந்த புதிய விதிகளுக்கு தகுதியானவர்கள். புகைபிடித்தல், மது அருந்துதல் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடத்தையில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் IRCTC யிலிருந்து கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள்.ஏசி கோச்சில், பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் 70 கிலோ வரை பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.  ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பில் 35 கிலோ வரையிலும் தூக்கிச் செல்லும் சாமான்கள் இலவசம். கூடுதல் லக்கேஜ் கட்டணத்துடன் பயணிகள் 150 கிலோ லக்கேஜையும், ஸ்லீப்பரில் 80 கிலோவையும், இரண்டாவது இருக்கையில் 70 கிலோவையும் கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள். அதில் பயணிக்கும் பயணிகள்  இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். இரவு 10 மணிக்...

திருச்சிராப்பள்ளியில் நடந்த அதிமுக 51 வது ஆண்டு துவக்க விழா மாநாடு ஒரு சாதனையா அல்லது மேலிடம் வைத்த சோதனையா முடிவு வருமா

ஒரே மாலை இரண்டு கொக்கிகள் திருச்சிராப்பள்ளி  பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51  வது ஆண்டு துவக்க விழாவும், முன்னாள் முதலமைச்சர்கள் செல்வி ஜெ.ஜெயலலிதா மற்றும் அஇஅதிமுக நிறுவனர் டாக்டர்  எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவென முப்பெரும் விழா மாநாடு ஒருங்கிணைப்பாளர் மற்றும் அக்கட்சியின் முன்னால் முதல்வர் மற்றும் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் சார்ந்த அணியினர் சார்பில் நடைபெற்றதில் சென்னை லாயிட்ஸ் சாலையிலுள்ள அதிமுக தலைமை அலுவலக வடிவில் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 30,000 த்துக்கும்  அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரவைப்  பகலாக்கும்  மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தத மாநாட்டில் முன்னால் அமைச்சர்கள் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன்,  வெல்லமண்டி நடராஜன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பானதடியன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாநாட்டுத் திடலுக்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாகமாகவே வரவேற்பளித்தனர். மாநாடு நடைபெறும் இடத்தின் நடுமையத்தில் சி...

ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியார் பிறந்தநாள் பிரதமர் மரியாதை

ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார் ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது; “அத்வைத வேதாந்தத்தின் நிறுவனரும், இந்திய கலாச்சார மறுமலர்ச்சியின் முன்னோடியுமான ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் அவர்களின் பிறந்தநாளில் கோடிக்கணக்கான வணக்கங்கள். ஒரே இந்தியா உன்னத இந்தியாவின் உயிர்நாடி அவரது ஆன்மீகச் செய்திகளில் பொதிந்துள்ளது, இது காலகாலத்திற்கும் நாட்டு மக்களின் உந்து சக்தியாகத் தொடரும்.”

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றிய 1128 கிராம் தங்கம்

ரூ.60.58 லட்சம் மதிப்புடைய 1128 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினார்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி, 20.04.2023 அன்று துபாயில் இருந்து வந்த ஆண் பயணியை சோதனை செய்ததில் அவர் தமது முழங்கால் பட்டையில் மறைத்து வைத்திருந்த 60.58 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1128 கிராம் எடை உடைய தங்கம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அப்பயணி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் திரு மேத்யூ ஜாலி தெரிவித்தார்.

இசைத் திறமைவாய்ந்த சிறுமி ஷார்மிலி

திறமைவாய்ந்த சிறுமி ஷார்மிலியின் வீடியோவை பிரதமர் பகிர்ந்துள்ளார் பிரதமர் திரு. நரேந்திர மோடி, இளம் திறமையாளரான ஷார்மிலியின் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அவரது இசைப்புலமையை வெகுவாகப் பாராட்டி உள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- " இந்த வீடியோ அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.  அசாத்தியத்திறமை மற்றும் படைப்பாற்றல். ஷார்மிலிக்கு வாழ்த்துகள்"

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த பகவான் ஹனுமன் சிலை மீட்பு

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த பகவான் ஹனுமன் சிலை மீட்பு: தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைப்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த பகவான் ஹனுமன் சிலை மீட்கப்பட்டு, அது தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் பொட்டவெளி வெள்ளூர் ஸ்ரீவரதராஜ பெருமாள் விஷ்ணு ஆலயத்திலிருந்து பகவான் ஹனுமன் சிலை கடத்தப்பட்டது. அந்த சிலை 14-15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த சிலையாகும். இது 1961-ம் ஆண்டு  புதுச்சேரி பிரான்ஸ் நிறுவனத்தின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டது. 2012-ம் ஆண்டு கடத்தப்பட்ட இந்த சிலை, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டு கேன்பராவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 2023 பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் அந்த சிலை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, அது 18.04.2023 அன்று வழக்கு சொத்தாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய அரசு நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்க...