முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விஸ்வபிரியா நிதி நிறுவன மோசடி வழக்கில் சுபிக்‌ஷா' சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு சிறை

விஸ்வபிரியா நிதி நிறுவன இயக்குநரும், 'சுபிக்‌ஷா' சூப்பர் மார்க்கெட் உரிமையாளருமான சுப்பிரமணியனுக்கு இருபதாண்டுகள் சிறை நிதி நிறுவன மோசடி வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் & செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்  நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக 587 முதலீட்டாளர்களிடம் ரூபாய்.47.68 கோடியை மோசடி செய்ததாக வழக்கின் தீர்ப்பில்   இயக்குநர் 'சுபிக்‌ஷா' சுப்பிரமணியனுக்கு இருபதாண்டுகள், இயக்குநர் ஸ்ரீவித்யாவுக்கு நான்காண்டுகள், மற்றம் உள்ள இயக்குநர்கள், ஊழியர்களென ஒன்பது பேருக்கு தலா பத்தாண்டுகள் சிறை தலைமறைவான இயக்குனர் அப்பாதுரையை தேடப்படும் குற்றவாளியென அறிவிப்பு செய்தது, தண்டிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய்.191.98 கோடி அபராதம் விதிப்பு - அபராதத் தொகையில் ரூபாய்.180 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்கவும் உத்தரவு. சுபிக்ஷா மளிகை் பொருட்கள், காய்கனிகள், மருந்துகள் மற்றும் மொபைல் போன்களை விற்பனை செய்யும் 1600 விற்பனை நிலையங்களைக் கொண்ட சில்லறை வணிக நிறுவனமாகும் .1997 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது, நிதி முறைகேடு மற்றும் கடுமையான பண நெ...

பல லட்சம் விழிகளுக்கு ஒளி தந்த மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்

 சங்கர நேத்ராலயாவை நிறுவனர் பல லட்சம் விழிகளுக்கு ஒளி தந்த டாக்டர்.திரு. எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார். அவரது இழப்பு மருத்துவத்துறைக்கு மட்டுமல்லாது இந்தியாவின் எண்ணற்ற ஏழை எளிய‌‌ மக்களிந் பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடும் அவரது குடும்பம் மற்றும் சங்கர நேத்ராலயா குழும நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகைகளுக்கு வரிந்து கட்டும் மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் விவகாரம்

நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு  காவல்துறை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ஒரு அனுப்பியது. தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரபூர்வமான எக்ஸ் பக்கத்தில் "நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது எனவும் இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிடுகிறோம். இந்தக் கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாகக் கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று”. எனக் கூறப்பட்டுள்ளது." இந்த நிலையில் கொதித்த நடிகர் நான் மன்னிப்புக் கேட்கிற ஜாதியா? நடிகர் சங்கத்துக்கு இன்னும் நான்கு   மணி நேரம் டைம் தர்ரேன், அதுக்குள்ள என்னைப் பத்தி வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறவேனும் நான் எரிமலையாக வெடிக்க ஆரம்பிச்சா எல்லாரையும் கோவணத்தோட ஓட விட்டுருவேன், நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேனென்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர வேண்டும் . நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ள...

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதா மீண்டும் பேரவையில் விவாதம்

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதாக்களை  மாநில ஆளுநர் அரசுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதையடுத்து, உடனே சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை கூட்டி, மீண்டும் அந்தத் தீர்மானத்தை திரும்ப ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. "1994ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதியன்று தமிழ்நாட்டில் அப்போதிருந்த 13 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு,  மாநில ஆளுநரிடம் இருந்ததை மாற்றி முதல்வர் தான் அந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியது அப்போதய அ தி மு க அரசு. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக்காலத்தில் முதல்வர் இருக்க மாட்டாரே, அப்போது யார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக இருப்பார்கள் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எப்போதுமே பேசப்படும் நிலையில் தமிழ்நாடு  சட்டமன்றப்பேரவையில், தி மு க வின்  சார்பில் அந்தச் சட்டம் தேவையற்றது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டதென்று'' தி மு க வின்  தலைவரக முன்னால் முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது  டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர...

இயக்குநரும், நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் காலமானார்

இயக்குநரும், நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் பிள்ளை காலமானார். அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வெள்ளளூர் அருகிலுள்ள பழையூர்பட்டி கிராமத்திலுள்ள அவரது வீட்டில் இன்று காலை 6.30 மணிக்கு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 84 , இருபது வருடம் முன்பு வரை கோட்டநத்தம்பட்டியில்  லெட்சுமி டூரிங் தியேட்டரில்  ஆப்பரேட்டராகப் பணியாற்றியவராவார்.                    சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றவர்  பலனில்லாமல் உயிரிழந்தார். இறுதிச் சடங்குகள்  அவர் சொந்த ஊரில் நடைபெறுமெனக்கூறப்படுகிறது. இந்த நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,காலம்சென்ற பாண்டியன் மனைவி  கமலா பழையூர்பட்டி ஊராட்சி  தொடக்கப் பள்ளியின்  ஆசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர். அவர்களுக்கு  இரண்டு மகள்களும். ஒருமகன் சேரனும் சிறு வயதில் நம்மோடு அறிமுகம் ஆன நபர் பல நாடகங்களிலும் நடித்துள்ளார். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில்,  19 ஜீன்...

இந்து சமய ஆலயங்கள் மதசார்பற்றவை என்பது சாத்தியமா உச்சநீதிமன்றம் வினா

இந்து சமய ஆலயங்கள் மதசார்பற்றவை என்பது சாத்தியமா  உச்சநீதிமன்றம் வினா ஆலயங்கள் ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவத் திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் "தற்போதைய நிலைமையே இறுதித் தீர்ப்பு வரும்வரை தொடர வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி உச்சநீதிமண்றம் பிறப்பித்த உத்தரவை விலக்குவதற்கு இன்று மறுப்பு   இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஜி.பாலாஜி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்த விபரம் :  27.ஜூன்.2023-ஆம் தேதி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களில்லாத அர்ச்சர்களுக்கு மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓர் ஆண்டு காலம் பயிற்சியளிக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசின் சம்பந்தப்பட்ட துறை பிறப்பித்தது. மேலும் 28.ஆகஸ்ட்.2023- ஆம் தேதியில் எதிர்மனுதாரர்கள் வெளியிட்ட தமிழ்நாடு அரசுக் கடிதத்தில் ஆகம விதிகளின்படி நிர்வகிக்கப்படும் கோவில்களில் பூஜைகள், சடங்குகள் செய்வதில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகம விதிப்...

நடிகை நமீதாவின் கணவருக்கு மோசடிப் புகாரில் விசாரிக்க காவல்துறை சம்மன்

எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலின்  பெயரில் நடிகை நமீதா கணவர் மோசடி இந்தப் புகார் தொடர்பாக நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மற்றும் மஞ்சுநாத் ஆகிய இருவரையுமஹ  விசாரணைக்கு ஆஜராகுமாறு சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பியுள்ளனர். சேலத்தில் எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு நிறுவன ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டதில் எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சில் அமைப்பின்  தலைவர் முத்துராமன்,  செயலாளர் துஷ்யந்த் யாதவ் கலந்துகொண்டகூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியான நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சௌத்ரி மற்றும்  பா ஜ க ஊடகப் பிரிவு மாநில துணைத் தலைவர் மஞ்சுநாத் ஆகியோர் கலந்துகொண்டனர். எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலின் தலைவ்ர் மஞ்சுநாத் மற்றும்  செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோரது கார், விசிட்டிங் கார்டு உள்ளிட்டவைகளில் இந்தியஅரசின் முத்திரை அசோகசக்கரம்  சின்னத்தை தவறாகப் பயன்படுத்துவதாக காவல்துறைக்கு இரகசியப் புகார்  சென்றதால், சேலம் ஜாகீர் அம்மா பாளையத்தை சேர்ந்த பைனான்சியர் கோபால் சாமி, எம்....