திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது DVAC முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை (ED) வழங்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.: கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது, நகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது இந்த டெண்டர் முறேகடு மற்றும் கட்சி நிதி என்ற பெயரில் சுமார் ரூபாய் 1,020 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கே.என்.நேருவின் சகோதரர் இரவிச்சந்திரன் லஞ்சப் பணம் கைமாறுவதைக் கண்காணித்ததாகவும், மற்றொரு சகோதரர் மணிவண்ணன் அந்தப் பணத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை வகித்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாக, திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. ...
RNI:TNTAM/2013/50347