*பாண்டிச்சேரி சட்டவிரோத ரிசார்ட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு: நவம்பர் 13-க்குள் இடிக்காவிட்டால் கலெக்டர் மீது தண்டனை!* *பாணடிச்சேரி:* பாண்டிச்சேரி தேங்காய்திட்டு, முத்துப்பிள்ளைபாளையம் பகுதியில் N.T.சம்பத் என்பவரால் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஜேம்ஸ் கோர்ட் பீச் ரிசார்ட் (James Court Beach Resort) முழு கட்டிடத்தையும் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் கடைசி கெடு விதித்துள்ளது. *வழக்கு பின்னணி:* பண்டிச்சேரியை சேர்ந்த V.பிரபா தேவி என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த ரிசார்ட் எந்தவித திட்ட அனுமதியும் (Planning Permission), கடலோர ஒழுங்குமுறை (CRZ) அனுமதியும் இன்றி, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஏற்கனவே கட்டிடத்தை அகற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால் பாண்டிச்சேரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், பிரபா தேவி *நீதிமன்ற அவமதிப்பு மனு (Contempt Petition No. 1288 of 2025)* தாக்கல் செய்தார். *01.10.2026 அன்று நடந்த விசாரணை:* இந்த மனு நீதிபதிகள் *P.T.ஆஷா மற்றும் N.மாலா* அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் J.அ...
RNI:TNTAM/2013/50347