*ரகுபதி குற்றச்சாட்டு (திமுக முன்னாள் அமைச்சர்) - நேற்று அண்ணா அறிவாலயத்தில்:*
> "இடைத்தேர்தலே அறிவிக்கல, இப்போதே விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டார். இதுதான் தூய ஆட்சியா?"
- விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தல் தேதி கூட அறிவிக்கவில்லை, வேட்பாளர் யார் என்றும் தெரியவில்லை.
- ஆனால் தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தீபாவளி பரிசு என்ற பெயரில் 90,000 குடும்ப அட்டை தாரர்களுக்கு வீடு வீடாக
- எவர்சில்வர் பெரிய பாத்திரம்
- ஸ்வீட் பாக்ஸ்
- ரசகுல்லா டின்
என ரூ.2000 மதிப்புள்ள பொருட்களை முதல் கட்டமாக விநியோகிக்க தொடங்கிவிட்டார்.
- சிலருக்கு ரொக்கமாக பணமும் கொடுக்கிறார் என பரபரப்பு குற்றச்சாட்டு.
- புதுக்கோட்டைக்கு முதலமைச்சர் விஜய் வந்த போது ரூ.10 கோடி செலவில் 45 கி.மீ பேரிகார்டு, பிரமாண்ட பந்தல் - ஆனால் புதிய திட்டம் எதுவும் அறிவிக்கவில்லை எனவும் விமர்சனம்.
*விஜயபாஸ்கர் பதில்:*
> "இட்லி குண்டா ரகுபதி பொய் சொல்கிறார்"
- இடைத்தேர்தல் தேதி, வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை, எந்த பணியும் தொடங்கவில்லை.
- தீபாவளி ஸ்வீட் கொடுப்பது வழக்கமான பழக்கம், இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை.
- கடந்த தேர்தலில் ரகுபதி தான் அண்டா, குண்டா கொடுத்தவர், அதனால் தான் மக்கள் அவரை 'இட்லி குண்டா ரகுபதி' என அழைக்கிறார்கள் என பதிலடி.
*பின்னணி:* புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு விஜயபாஸ்கர் அதிமுக-வில் இருந்து தவெக-வில் இணைந்ததால் இடைத்தேர்தல் வர உள்ளது.
கருத்துகள்