முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக முதல்வர் மீது திமுக தலைவர் குற்றச்சாட்டு

கொரானா விவகாரத்தில்  தவறான புள்ளி விவரங்களை அளிப்பதாக தமிழக முதல்வர் மீது திமுக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். கொரானா தொற்றுத் தடுப்பு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் கருத்து வேறுபாடுகளும், அறிக்கை யுத்தமும் நடக்கின்றன.
நேற்று மாலை முதல்வர் கொரானாவிலும் ஸ்டாலின் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு ஏப்ரல் 17 அறிக்கை மூலம் பதிலளித்துள்ள ஸ்டாலின்,
“பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கொரானாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது. இவை இரண்டுக்கும் மத்தியில்தான் மக்களின் வாழ்க்கை ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து துறைச் செயலாளர், துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், அது போதாதென்று மற்றொரு அமைச்சர் ஆகியோரின் கொரோனா குறித்த பேட்டிகளுக்குப் பிறகு, அடுத்து கிளைமேக்ஸ் காட்சி போல, நேற்று 16.4.2020 ல், தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை ஒழித்துவிட்டதாக தனக்குத் தானே முதுகில் தட்டி முறுவலித்துக் கொள்கிறார். 'இன்னும் இரண்டு மூன்று நாளில் கொரானாவே இருக்காது' என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார். இதற்கு இவர் காட்டிய புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது, இவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றித் திசைதிருப்புகிறாரா, அல்லது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை.
'நேற்றைய தினம் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள், இன்றைய தினம் 25 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியானால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகத்தானே அர்த்தம்" என்று கேட்கும் அவரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அவரே சொல்கிறார்; இதுவரை 17 ஆயிரத்து 835 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 1383 பேரின் முடிவுகள் வரவில்லை என்கிறார்.சுமார் 18 ஆயிரம் என்பது தமிழ்நாட்டு மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் என்பதை அவருக்கு அருகில் விவரம் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ள ஸ்டாலின், மத்திய அரசின் அறிவிப்பை சுட்டிக் காட்டியுள்ளார்.
“மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில்தான் கொரானா நோய்த் தாக்கம் இருக்கிறது என்று மத்திய அரசு அறிவித்தது. இப்போது 22 மாவட்டங்களுக்கு அதிகமாகப் பரவிவிட்டது என்றும், மூன்றே மூன்று மாவட்டத்தில் தான் கொரானா பாதிப்பு இல்லை என்றும் மத்திய அரசு சொல்கிறது என்றால், இதுதான் கொரானாவை காலத்தே கட்டுப்படுத்திய செயலா? பிப்ரவரி மாத இறுதியிலும், மார்ச் தொடக்கத்திலும் என்ன செய்து கொண்டு இருந்தார் முதலமைச்சர்? சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்பியபோது, "தமிழகத்தில் ஒருவருக்குக் கூட கொரோனா வராது, வரவிடமாட்டோம்" என்று மார்தட்டினார். ‘70 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வருந்த வேண்டாம், அவருக்கு வந்தாலும் சிகிச்சை அளிப்போம்’ என்று கொடூரமான கிண்டல் அடித்துக் குதூகலம் கொண்டார். ‘வயதானவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மட்டும்தான் வரும்’ என்றார், அனைத்தையும் ஐயம் திரிபற அறிந்த சுகாதார அமைச்சர்!
ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன? கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் மூன்றாவது இடம் தமிழகம். விலை மதிப்பில்லாத 15 உயிர்களை இழந்திருக்கிறோம்; 1264 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்; இதில் 30-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். அனைத்துக்கும் மேலாக சிகிச்சை கொடுத்து வந்த மருத்துவர்களில் பத்துப்பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். இன்னும் எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற தரவுகளே தெரியவில்லை; திரைமறைவு ரகசியமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் உண்மை நிலையை உணர்ந்து; மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையுடன், மற்றவர் உயிர்மீது நெஞ்சில் கொஞ்சம் ஈரத்துடன் செயல்படாமல், "கொரானா இன்னும் 3 நாளில் ஒழிக்கப்பட்டு, ஜீரோவாக ஆகிவிடும்" என்று, ஏதோ, சூ...மந்திரக்காளி போல, முதலமைச்சர் சொல்கிறார் என்றால்; இவருக்கு இன்னமும் நோயின் தீவிரம் புரியவில்லையா, அல்லது அருகில் இருப்போர் சரியான தகவல்களை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கவில்லையா, என்றுதான் மருத்துவ நிபுணர்கள் கேட்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
மேலும் தான் கொரானா விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை என்றும் அக்கறையோடு செயல்படுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“ரேப்பிட் டெஸ்ட் பரிசோதனைக் கருவிகள் மார்ச் 9-ம் தேதி வந்துவிடும் என்றார், 10-ம் தேதியே ஒரு லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்துவிடுவோம் என்றார். அப்படி எந்த பரிசோதனையும் நடக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து 13 ஆயிரம் கோடி பணம் கேட்டார். வந்ததோ வெறும் 800 கோடி. ஆனால் மத்திய அரசிடம் இருந்து பணம் பெற தைரியமும் இல்லை, தட்டிக் கேட்கும் நெஞ்சுரமும் இல்லை. இந்த கோழைத்தனத்தை மறைக்க, 'தி.மு.க. எம்.பி.,க்கள்தானே வாதாடி வாங்கித்தர வேண்டும்? மத்திய அரசை வற்புறுத்தினார்களா? ஏதாவது ஸ்டெப் எடுத்தார்களா?" என்று வக்கணையாகக் கேட்டுள்ளார் முதலமைச்சர். தமிழக அரசு கேட்ட நிதியைத் தர வேண்டும் என மூன்று அறிக்கைகளை நான் வெளியிட்டுள்ளேன். பிரதமர் நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இதனைக் கோரிக்கையாக வைத்து வலியுறுத்தினார்; எழுத்து மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளார். இதை எல்லாம் முதல்வர் மறந்துவிட்டாரா? மறைக்கிறாரா?
நோயில் நான் அரசியல் செய்வதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். அடையாளம் காணப்படாத 'கூவத்தூர் நோயினால் நடந்த அரசியல் விபத்தால்' முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நாடு மறந்துவிடாது. கொரோனாவில் நான் அரசியல் செய்வதாக இருந்தால், முதலமைச்சருக்கு எந்த ஆலோசனையும் சொல்லாமல் வாய்மூடி இருந்திருக்க வேண்டும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்காமல் இருந்திருக்க வேண்டும், தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்காமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் நான் இருந்தால்தான் அரசியல் செய்வதாக அர்த்தம். மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கி, உதவிகள் செய்து, மத்திய அரசிடம் வாதாடுவதற்குப் பேர் அரசியல் அல்ல; அக்கறை.
மீண்டும் முதலமைச்சருக்குச் சொல்வது, அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல! நோயை மறைக்காதீர்கள்; பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிவரங்களை அள்ளிவீசாதீர்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனடியாக வாங்குங்கள். பிழையான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தராதீர்கள். எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள். நோயை மறைப்பது என்பது உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவதுமாகும்.
உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிறேன். 'கொரோனா என்பது பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது' என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்து நிறுத்தப் பாருங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...