வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கான மே 17 வரை அனுமதியில்லை.
தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி மற்றும் அந்தப்பகுதி மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணி செய்யலாமென அறிவித்த நிலையில்.
பொதுநலன் கருதி அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மே 17-ம்தேதி வரையில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கான அனுமதியை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசாணையில்
மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தவை மே 4 ஆம் தேதி முதல் மே 17ஆம்தேதி நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளின் அடிப்படையில் நீட்டிப்பு செய்ததன் காரணமாக 03 மே 2020 அன்று வெளியிடப்பட்ட பணி புரிய அனுமதிக்கப்பட்ட தை மாற்றி
தற்போது பொதுநலன் கருதி 04 மே 2020 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு பணி புரிய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது.
ஆகவே வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் 17.05.2020 நள்ளிரவு ஊரடங்கு முடியும் வரை தாங்கள் பணிபுரியும் வீடுகளுக்கு செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்களென அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்