முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பத்து ரூபாய் சென்னை பிரியாணிக்கு கூடிய மக்களை நம்பித்தான் நாளை ஜனநாயகம் மலரும் என நம்புகின்றனர்

பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை முகலாயர் காலத்தில் இந்தியாவிலேயே உருவானது. தெற்காசியாவில் மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களும் பிரியாணியின் உள்ளூர் வகைகளை விரும்பி உண்கிறார்கள்.பெர்சிய நாட்டுப் போர்வீரர்களின் உணவே இன்று நாம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் `பிரியாணி'. போருக்காக நாட்டைவிட்டு வெகுதூரம் பயணம் செய்யும் வீரர்கள், கையில் கொஞ்சம் அரிசி மற்றும் மசாலாப் பொருள்களை எடுத்துச் செல்வது வழக்கம். போர் நேரம் முடிந்தவுடன், காட்டுக்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களை வேட்டையாடி, ஓய்வெடுக்கும் இடத்துக்குக் கொண்டுவருவார்கள். பிறகு, நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மசாலா கலவையை, மாமிசம் மீது தடவி, இரவு முழுவதும் ஊறவைத்துவிடுவர். அதிகாலையில், நன்கு ஊறிய மசாலா மாமிசத்தை, அரிசியோடு கலந்து தண்ணீர் ஊற்றி கனமான பொருளைக்கொண்டு இறுக்கமாக மூடிவிடுவர். பிறகு, ஆழமான குழியில் தீ மூட்டி, இந்தக் கலவைப் பாத்திரத்தை அதன் மீது வைத்து அடைத்துவிடுவார்கள். நண்பகல் போருக்குச் செல்வதற்கு முன், நன்கு வெந்து இருக்கும் இந்தச் சாதத்தைச் சாப்பிடுவார்கள். முதலில் வெறும் மசாலாவை மட்டுமே உபயோகப்படுத்திய வீரர்கள், பிறகு நறுமணத்துக்காக அந்நாட்டில் கிடைக்கக்கூடிய சில வாசனைப்பொருள்களைச் சேர்க்க ஆரம்பித்தனர். இப்படி போர் வீரர்கள் சாப்பிட்ட இந்தக் கலவைச் சாப்பாடு, நாளடைவில் அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களால் விரும்பிச் சாப்பிடும் உணவாக மாறியது. அங்கிருந்து இந்தியாவுக்குப் பயணித்த முகலாயர்களால் கலவை உணவு, மன்னர் குடும்பம் மட்டும் உண்ணும் `பிரியாணியாய்' உருவெடுத்தது. போர்வீரர்களுக்குப் போதுமான அளவு சத்துடைய உணவு இல்லாததைக் கண்ட ஷாஜஹானின் மனைவி மும்தாஜ், போர்வீரர்களுக்கு பிரியாணியின் செய்முறையைக் கற்றுக்கொடுத்தார். அன்று முதல், இஸ்லாமியர்கள் ஆட்சிசெய்த இடங்களிலெல்லாம் பிரியாணி பரவியிருந்தது. ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலில் இதில் நெய் சேர்க்கும் முறை உருவானது. பிரிட்டிஷ் ஆதிக்கம் அதிகம் இருந்ததால், அவர்களுக்குப் பரிமாறப்படும் பிரியாணிகளில் நெய் சேர்த்து வழங்கினர். பிறகு, இடத்துக்கு ஏற்றார்போல் பல்வேறு வகையான பிரியாணிகள் உருவாகின. அரண்மனைச் சமையலறை வரை மட்டுமே பரவியிருந்த இதன் ரெசிபி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பொதுமக்களுக்கும் போய்ச்சேர்ந்தது. பிரியாணி என்பது அரிசி, மசாலாப் பொருட்களுடன் முட்டை, மற்றும் ஆடு, மாடு, கோழி இறைச்சி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவை குறிக்கும். பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி அரிசியைப் பயன்படுத்துவார்கள். பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் beryā (بریان) என்னும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது. நமது கலச்சாரத்திற்கு சற்றும் ஒவ்வாத இந்த பிரியாணி நமக்கும் நம் நாட்டில் உள்ள சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றதல்ல. நம் மக்கள் இலவசம் விரும்பிகள் ஆகவே யார் குறைவாக எதுகொடுத்தாலும் வாங்கும் பழக்கம் தான் பிரியாணி பத்துக் கொடுத்து நூறு லாபம் என்ற உடன் கடையில் குவிந்த மக்கள்.இந்தியாவில் பிரியாணி எனும் உணவு வகை மக்கள் 1970 க்குப் பின் பத்து சதவீத மக்களிண் எப்போதோ ஒருநாள் விருந்துணவாக இருந்தது இப்போது மிகவும் கொடுமையாக மக்கள் அரபுநாட்டு உணவான பிரியாணிக்கு அடிமைப்பட்டுப் போயுள்ளனர் அது இப்போது எங்கு பார்த்தாலும் பிரியாணிக் கடைகள் நமது கலாச்சார உணவுப் பழக்கம் காணாமல் போக இதுவும் ஒருகாரணம். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் நேற்று புதிதாக பிரியாணிக் கடை திறந்த நபர் கடை பிரபலப்படுத்த திறப்பு விழாச் சலுகையாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார் அதில் கடையின் திறப்பு விழாவன்று 10 ரூபாய் கொடுத்துப் பிரியாணி பார்சலைப் பெற்றுச் செல்லலாம் என அறிவிக்கவே. 10 ரூபாய் நாணயத்துடன் 500 க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பிரியாணி வாங்கப் பொதுமக்கள் முண்டியடித்ததால், கொராணாவில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது , அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்து போக்குவரத்தை நெரிசலை சீரமைத்தனர். பின், அரசு உத்தரவை மீறி முன்அறிவிப்பு இன்றி அதிக அளவில் கூட்டம் கூட வைத்த, கடை உரிமையாளர் ஜாகீர் உசேன் என்பவர் மீது காவல்துறை 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...