முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மெஹாவாட்டிலிருந்து ஜிஹாவாட் மறுமுதலீட்டுத்திட்டம், 2020 பிரதமர் துவங்கி வைக்கிறார்

பிரதமர் அலுவலகம் ரீ-இன்வெஸ்ட் 2020-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார் மெகாவாட்டுகளில் இருந்து ஜிகாவாட்டுகளை அடையும் திட்டங்கள் நிஜமாகி வருகின்றன: பிரதமர் இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கடந்த ஆறு வருடங்களில் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் வலுவான சுற்றுச்சூழல் கொள்கைகள் வலிமையான பொருளாதாரமாகவும் ஆகலாம் என்பதை இந்தியா செய்து காட்டியுள்ளது: பிரதமர் மூன்றாவது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சியை (ரீ-இன்வெஸ்ட் 2020), காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்த மாநாடு, இன்று முதல் 28 நவம்பர் வரை நடக்கிறது. 'நீடித்த எரிசக்தி மாற்றத்துக்கான புதுமைகள்' என்பது ரீ-இன்வெஸ்ட் 2020-இன் மையக்கருவாகும். இம்மாநாட்டின் முந்தைய பதிப்புகளில் விவாதிக்கப்பட்ட விஷயங்களான உற்பத்தித் திறனில் மெகாவாட்டில் இருந்து ஜிகாவாட்டுக்கு மாறுவது, 'ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்சார தொகுப்பு' ஆகியவை குறுகிய காலத்துக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நிஜமாகி வருவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த ஆறு வருடங்களாக இணையில்லா பயணம் ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். ஒவ்வொரு இந்தியரும் அவரது திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டு வரும் வகையில் அவருக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்தியாவின் மின்சார உற்பத்தி திறனும், விநியோகத் திறனும் விரிவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் சர்வதேச அளவில் நான்காவது இடத்தில் தற்போதுள்ள இந்தியா, முக்கிய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிக வேகத்தில் வளர்ந்து வருவதாக அவர் கூறினார். நம்முடைய மொத்த உற்பத்தி திறனில் 36 சதவீதமாக, அதாவது 136 ஜிகாவாட்டுகளாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் தற்போது உள்ளது. 2017 முதல் நிலக்கரி சார்ந்த மின்சாரத்தை விட இந்தியாவின் வருடாந்திர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் அதிகரித்து வருவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கடந்த ஆறு வருடங்களில் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். புதுப்பிக்க எரிசக்தி துறையில் முன்னதாகவே முதலீடு செய்ததன் மூலம் இதை அடைய முடிந்ததென்றும், இதன் மூலம், அப்போது அதிகமாக இருந்த விலைகள் தற்போது குறைந்து வருவதாகவும் திரு மோடி கூறினார்.  வலுவான சுற்றுச்சூழல் கொள்கைகள் வலிமையான பொருளாதாரமாகவும் ஆகலாம் என்பதை உலகத்திற்கு இந்தியா செய்து காட்டியுள்ளது என்று அவர் கூறினார். எரிசக்தி செயல்திறன் என்பது ஏதோ ஒரு அமைச்சகம் அல்லது துறைக்கு மாத்திரமானது என்றில்லாமல், ஒட்டுமொத்த அரசுக்கும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எரிசக்தி திறனை அதிகரிக்கும் வகையிலேயே நமது கொள்கைகளும் உள்ளன. மின்னணு பொருட்கள் தயாரிப்பு துறையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகளின் வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற ஊக்கத்தொகைகளை உயர்திறன் சூரிய சக்திப் பொருட்களுக்கும் தர நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்று பிரதமர் கூறினார். "தொழில் செய்வதை எளிதாக்குவது" எங்களது முக்கிய முன்னுரிமை என்றும், முதலீட்டாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக பிரத்யேக திட்ட மேம்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த தசாப்தத்திற்கான மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தயாராக உள்ளதாகவும், வருடத்திற்கு 20 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் வர்த்தக வாய்ப்புகளை இவை உருவாக்கும் என்றும் அவர் அறிவித்தார். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்தில் இணையுமாறு முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...