முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டிய இந்தியன் ஆயில் நிறுவனத் திட்டங்கள்

மத்திய உள்துறை அமைச்சர் சென்னையில் அடிக்கல் நாட்டிய இந்தியன் ஆயில் நிறுவன திட்டங்களின் விவரங்கள். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கடந்த 21-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி, துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது தமிழக அரசின் தொழில் ஆலோசனை மன்றத்துடன் ரூபாய் 7900 கோடி முதலீடு செய்வதற்கு கையெழுத்திடப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த மூன்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு: பெட்ரோல் முனையம்- வல்லூர்: காமராஜர் துறைமுகத்துக்கு அருகே 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள வல்லூர் முனையம் 2 லட்சம் கிலோலிட்டர் பெட்ரோல் சேமிக்கும் திறன் கொண்டதாகவும், இங்கு, பெட்ரோல் நிரப்பும் வாகனங்கள் நிறுத்துவதற்கு 24 தடங்களும் அமைக்கப்படும். ரூபாய் 900 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள இந்த முனையம், வரும் 2023-ஆம் வருடம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமராஜர் துறைமுகத்தில் இறங்கு தளம்- எண்ணூர்: வல்லூர் முனையத்தில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை கப்பல் வாயிலாக எடுத்துச் செல்வதற்கு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் புதிய இறங்குதளம் அமைக்கப்படவிருக்கிறது. ஆண்டுக்கு 2 முதல் 3 மில்லியன் மெட்ரிக் டன்களை கையாளும் வகையில் இந்த தளம் அமைக்கப்படும். ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த இறங்குதளம் 2025-ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட லூப் வளாகம்- அமுல்லைவாயல்: மணலியில் அமுல்லைவாயல் கிராமத்தில் 71 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய வளாகம் அமையவிருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் பல்வேறு இயற்கைக்கு உகந்த மசகு எண்ணெய் வகைகள் கலவையாக்கப்படும். ரூபாய் 1400 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும் இந்தத் திட்டம், வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் ரூ. 3200 கோடி மதிப்பில் அமையவுள்ள இந்த திட்டங்களின் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்தத் தகவல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இந்தியன் ஆயில் மாநில தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பி ஜெயதேவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...