நிதி அமைச்சகம் பிப்ரவரி 2021-ல் ரூ. 1,13,143 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூல்
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ. 1,13,143 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 21,092 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 27,273 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 55,253 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூ. 24,382 கோடி உட்பட), செஸ் வரி ரூ. 9,525 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூ. 660 கோடி உட்பட) அடங்கும்.
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வழக்கமான பைசல் தொகையாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ. 22,398 கோடியையும், மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ. 17,534 கோடியையும் அரசு வழங்கியுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு பிப்ரவரியில் கிடைத்த மொத்த வருவாய் மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.67,490 கோடி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.68,807 கோடியாகும்.
கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் வருவாய் 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
கருத்துகள்