பாதுகாப்பு அமைச்சகம் ‘தில்லி சீரிஸ்’ கடல்சார் கருத்தரங்கின் 8-ஆவது பதிப்பு: அக்டோபர் 11, 12 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது
வருடாந்திர நிகழ்வான ‘தில்லி சீரிஸ்’ கடல்சார் கருத்தரங்கின் 8-ஆவது பதிப்பை எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமி, அக்டோபர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடத்த உள்ளது. இந்த வருடாந்திர கருத்தரங்கு, இணையதளம் வாயிலாக நடத்தப்படுவதுடன், பிரபல சமூக ஊடக தளங்களிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். ‘இந்தியப் பெருங்கடல் பகுதியின் கடல்சார் வரலாறு’ என்பது இந்த வருட கருத்தரங்கின் கருப்பொருளாகும். ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
முன்காலத்தில் கடல்சார் கலந்துரையாடல்கள் மற்றும் இன்று அவற்றுடனான சம்பந்தம், 15 முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான இந்தியாவின் கடல்சார் பயணம் மற்றும் 21-ஆம் நூற்றாண்டில் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை, ஆங்கிலேயே ஆட்சிக் காலம் முதல் சுதந்திரம் மற்றும் அதற்கு பிறகு வரையிலான இந்தியாவின் கடல்சார் பயணத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ஆகிய மூன்று உப தலைப்புகளின் கீழ் இந்தியப் பெருங்கடல் பகுதியின் கடல்சார் வரலாறு குறித்து வீரர்களுக்கு விளக்கம் அளிப்பதே இந்த வருட இணையதள கருத்தரங்கின் நோக்கமாகும்.
நாட்டின் தலைசிறந்த கடல்சார் வரலாற்று நிபுணர்கள் கலந்து கொள்ளும் வகையில், ‘75 ஆண்டுகளில் இந்திய கடற்படை' என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியும் கருத்தரங்கின் போது நடைபெறும்
கருத்துகள்