டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தாஹியாவிற்கு பிரதமர் மற்றும் தமிழகத்தின் முதல்வர் வாழ்த்து
பிரதமர் அலுவலகம் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தாஹியாவிற்கு பிரதமர் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தாஹியாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, குறிப்பிடத்தக்க மல்யுத்த வீரர் என்று அவரைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “ரவி குமார் தாஹியா, குறிப்பிடத்தக்க மல்யுத்த வீரர்! அவரது போராடும் ஆற்றலும், விடாமுயற்சியும் மிகச் சிறப்பாக உள்ளது. டோக்கியோ 2020 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையால் இந்தியா மிகுந்த பெருமை கொள்கிறது”, என்று கூறியுள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள மற்றும் ஒரு தகவலில் இந்திய ஹாக்கி அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பிரதமர் பாராட்டு
ஹாக்கி மற்றும் விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் 2021 ஆகஸ்ட் 5 மிகவும் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இருக்கும்: பிரதமர்
ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும், மனதிலும் ஹாக்கிக்கு சிறப்பான இடம் உண்டு
இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும், மனதிலும் ஹாக்கிக்கு சிறப்பான இடம் உண்டு என்று பிரதமர் கூறியுள்ளார். ஹாக்கி மற்றும் விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் 2021 ஆகஸ்ட் 5 மிகவும் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இந்திய ஹாக்கி அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் சிறப்பான வெற்றி குறித்து பிரதமர் உடனடியாக பதிவிட்டிருந்தார்
பின்னர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்ட பயனாளிகளுடன் உரையாடிய போது, இந்திய ஹாக்கி அணியின் வெற்றி குறித்து மீண்டும் ஒரு முறை பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.



கருத்துகள்