தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன்
ஊரடங்கை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.
அதிகம் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் கூடவும் வழிபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி மீன் கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க திறந்தவெளியில் தனித்தனிக் கடைகளாக பிரித்து விற்பனை செய்யவும். ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடையைதா தவிர மற்ற செயல்பாடுகளுக்குத் தடை விதிப்பு. ஏற்கனவேயுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் உள்ளது. பள்ளி செல்லாமல் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் பள்ளி மாணவர்களிடையே பெரும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









கருத்துகள்