இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,61,340 ஆக சரிவு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்





151 நாட்களுக்குப் பிறகு: இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,61,340 ஆக சரிவு

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 57.61 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 64,01,385 முகாம்களில் 57,61,17,350 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 36,36,043 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 36,347 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,15,97,982 ஆக உயர்ந்துள்ளது.

நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகவும் அதிகமாக 97.54 சதவீதமாக உள்ளது.

தொடர்ந்து 55 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 34,457 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 151 நாட்களுக்குப் பிறகு 3,61,340 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.12 சதவீதம் மட்டுமே ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 17,21,205 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 50,45,76,158 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 1.98 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.00 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 26 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 75 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்