தமிழ்நாடு முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
நடைபெற்றதில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாடு அரசின் நிதிநிலை வெள்ளையறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வெளியிடுகிறார்.
இதுவரை அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து 120 பக்க வெள்ளையறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரும் 9 ஆம் தேதி வெளியிடுகிறார்.
ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில், தமிழக அரசுக்கு இருக்கும் கடன் விவரங்கள், வருவாய் இழப்புகள் மற்றும் அதற்கான காரணங்கள் அனைத்தும் இந்த வெள்ளையறிக்கையில் இடம்பெறும் எனத் தெரிகிறது.
ஆகஸ்ட் மாதம்14 ஆம் தேதி வேளாண்மை நிதி நிலை அறிக்கை
திமுக ஆட்சி அமைந்து 100 வது நாள் காணும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வேளாண்மை நிதி நிலை அறிக்கை தாக்கலாகிறது. தமிழ்நாட்டின் முதல் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்யவும் திட்டம் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு , ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்காலிகமாகச் செயல்படும் தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் முறையாக காகிதம் இல்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆயுத்தமாகிறது. அதற்கு முன் ஏற்பாடுகள் தயாராகிறது.


கருத்துகள்