விமான சரக்ககம் மற்றும் விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக திரு கே.ஆர். உதய் பாஸ்கர் பொறுப்பேற்பு.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் விமான சரக்ககம் மற்றும் விமான நிலைய முதன்மை சுங்க ஆணையராக, திரு கே.ஆர் உதய் பாஸ்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். திரு கே.ஆர். உதய் பாஸ்கர் 1990ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரி. இவர் மும்பை, சென்னை, மைசூர், திருச்சி மற்றும் கொச்சியில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். அவர் கல்பாக்கம் அணு மின்சக்தி துறையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும், அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். விமான சரக்ககம் மற்றும் விமான நிலைய முதன்மை சுங்க ஆணையராக பொறுப்பேற்பதற்கு முன்பாக, அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய கலால் மற்றும் ஜிஎஸ்டி முதன்மை ஆணையராக பணியாற்றினார். இவ்வாறு சென்னையில் உள்ள இணை ஆணையர் திரு கே.பி.ஜெயகர் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்