முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் கீழ்க்காணும் தகவல்களை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்த விபரம்

பாதுகாப்பு அமைச்சகம்  மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை ஊக்கப்படுத்துவதற்காக அரசு ஏராளமான கொள்கைகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளது: மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட்


மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட், கீழ்க்காணும் தகவல்களை மாநிலங்களவையில்  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.


மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ள உபகரணங்கள்:

கடந்த சில ஆண்டுகளில் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் கீழ் ‘தனுஷ்’ பீரங்கி, பாலம் அமைக்கும் டாங்கி, ‘தேஜாஸ்’ இலகுரக விமானம், ‘ஆகாஷ்’ ஏவுகணை, ‘ஐஎன்எஸ் கல்வாரி' நீர்மூழ்கிக் கப்பல், கண்காணிப்புக் கப்பல்கள், ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் கந்தேரி உள்ளிட்ட ஏராளமான குறிப்பிடத்தக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உரிமம் மூலம் நாடு முழுவதும் தனியார் துறையினர் பாதுகாப்பு துறையில் பங்கு பெறுவதற்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போது பிகார் மாநிலத்தின் நாளந்தாவில் ஆயுத தொழிற்சாலை இயங்குகிறது


ஆயுதத் தொழிற்சாலை ஊழியர்களின் நலன் பாதுகாப்பு:

ஆயுதத் தொழிற்சாலை வாரியம் நிறுவனமயமாக்கப்பட்ட பிறகு, அதன் ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பதில் அரசு உறுதிப் பூண்டுள்ளது. இதன்படி, ஏ, பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள், புதிதாக உருவாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவர். அவர்களது நியமன தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்கு அயற்பணியில் அதற்கான படித் தொகையின்றி பணியாற்ற வேண்டும்.  ஊழியர்கள் அனைவரும், பாதுகாப்பு உற்பத்தி துறையின் கீழ் உருவாக்கப்படவுள்ள ஆயுதத் தொழிற்சாலை இயக்குனரகத்திற்கு மாற்றப்படுவர். அதுவரையில், அவர்களுக்கு மத்திய அரசின் ஊழியர்களுக்கான அனைத்து விதிமுறைகளும் பொருந்தும். அதன்படியே சம்பளம், படி, விடுமுறை, ஒய்வூதிய பலன்கள் இருக்கும். ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியத்தை அரசே தொடர்ந்து ஏற்கும்.

ஆயுதப் படைகளுக்கு நவீன


தொழில்நுட்பம்:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கிய அதிநவீன தளங்கள், ஆயுதங்கள் மற்றும் உணரிகள், ஆயுதப் படைகளுக்கு தொழில்நுட்ப உதவியை அளிக்கவும் திறனை மேம்படுத்தவும் பயன்படுகிறது. ஏவுகணை அமைப்புகள், வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு, போர் விமானங்கள், பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்டுகள், சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், தொலை தூர ரேடார்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் உபகரணங்கள்/ அமைப்பு முறைகளை மேம்படுத்துவதற்காக டிஆர்டிஓ திட்டங்களை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு சேவைகளை நவீனமயமாக்குவதற்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 23.78% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்:


பாதுகாப்புத் துறையில் தற்சார்பை ஊக்குவிப்பதற்காக ஏராளமான கொள்கைகளையும் சீர்திருத்தங்களையும் அரசு மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களின் உள்நாட்டு வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும். இதன் மூலம் இறக்குமதி மீதான சார்பும் வெகுவாகக் குறையும். மூலதன கொள்முதலுக்காக நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ. 1,11,463.21 கோடியில் ரூ. 71,438.36 கோடியை உள்நாட்டு மூலதன கொள்முதலுக்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நிதியாண்டுகள் மற்றும் தற்போதைய நிதியாண்டில் ஆயுத படைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 60% இந்தியர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் பாதுகாப்பு பொருட்களின்


தயாரிப்பு:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றும் நடப்பு மே மாதத்தில் முறையே 101 மற்றும் 108 பொருட்கள் அடங்கிய இரண்டு நேர்மறையான உள்ளூர்மயமாக்கல் பட்டியல்களை (முந்தைய எதிர்மறை பட்டியல்கள்) மத்திய அரசு அறிவித்தது. இந்த பொருட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலத்திற்குப் பிறகு இவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயுதப் படைகளின் தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டிலேயே இந்தப் பொருட்களை தயாரிக்க இதன்மூலம் இந்திய பாதுகாப்பு தொழில்துறைக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்தப் பொருட்களின் இறக்குமதிக்கான தடைக்காலம் 2020 டிசம்பர் முதல் 2025 டிசம்பர் வரை பரவியுள்ளது. மாதிரிகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பிற்கு இரண்டு அல்லது அதற்குப் மேற்பட்ட ஆண்டுகள் தேவைப்படும் என்பதால், அந்நிய பரிமாற்றம் மீதான சேமிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த மதிப்பீட்டை தற்போதைய நிலையில் மேற்கொள்ள இயலாது.



கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள்:



தேசிய அளவில் கொவிட்-19 தொற்றை எதிர்கொள்வதற்காக டிஆர்டிஓ ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த புரிதல் குறைவாக இருந்த காலகட்டத்திலும், பற்றாக்குறை நிலவிய போதும், கிருமிநாசினிகள், என்95, என்99 போன்ற முகக்கவசங்கள் , முழு உடல் கவச உடைகள் உள்ளிட்டவற்றை டிஆர்டிஓ உருவாக்கி, இந்த தொழில்நுட்பங்கள் ஏராளமான தொழில் துறைகளுக்கு இலவசமாக மாற்றித் தரப்பட்டது. தில்லி, பிகார், உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தற்காலிக கொவிட்-19 மருத்துவமனைகளை இந்த அமைப்பு நிறுவியது. தேசிய அளவில் கொவிட்-19 பரிசோதனையை அதிகரிக்கும் முயற்சிகளிலும் டிஆர்டிஓ தேவையான ஆதரவை அளித்தது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 2-டிஜி என்ற சிகிச்சை முறையை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையின் கீழ் நாடு முழுவதும் டிஆர்டிஓ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட 866 மருத்துவப் பிராணவாயு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தனிநபரின் எஸ்பிஓ2 அளவை உணர்ந்து அதற்கு தகுந்தவாறு பிராணவாயுவை விநியோகிக்கும் தனித்துவம் வாய்ந்த அமைப்பு முறையான ஆக்ஸிகேரை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது.

விமானப் படையை நவீனமயமாக்கல்:


உள்ளூர்மயமாக்கல், தரம் உயர்த்த மற்றும் ஒருங்கிணைத்தல் உள்ளிட்டவை அடங்கிய பல்முனை அணுகுமுறைகளுடன் விமானப்படையை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய ஆயுதங்கள், மேம்பட்ட விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் துல்லியமான திட்டமிடும் அணுகுமுறை, இந்திய விமானப்படையை நவீன இணைப்பை மையமாகக் கொண்ட   படையாக மாற்றியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...