முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டில்லியில் இராகுல்காந்தி தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாராளுமன்றத்திற்கு சைக்கிள் பேரணி

டில்லியில் இராகுல்காந்தி தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாராளுமன்றத்திற்கு சைக்கிள் பேரணி













பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் சைக்கிள் பேரணி. டெல்லியில் எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசித்த பின்னர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் அணைத்து உறுப்பினர்களும் ஊர்வலம்.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், முக்கிய நபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான தகவல் படி, அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களின் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது குறித்து சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய நிலையில், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதனால், நாடாளுமன்றம் முடங்குகிறது. நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் விவாதிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை செய்தனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செயல்படும் எதிர்க் கட்சிகளின் கூட்டுக் கூட்டம் நேற்றுக் காலை நடைபெற்றதில்

INC, DMK, NCP, SS, RJD, SP, CPIM, CPI, IUML, RSP, KCM, JMM, NC, TMC, LJD ஆகிய 15 கட்சிகள் ஒன்றுசேர்ந்த அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவெடுத்தன.

கூட்டத்தினைத் தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி சென்றனர்.

 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சீர்திருத்த சட்டங்கள், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு குறித்து  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அப்போது திட்டமிடப்பட்டது.

பின்னர் சைக்கிள் பேரணி நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி சைக்கிள் பேரணி நடத்தினார். வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த வாரம் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி நடத்தினார்.

 இப்போது சைக்கிள் பேரணி நடத்தியுள்ளார்.2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வியூகம் வகுக்கின்றன. ஒரு மாதம் முன்பு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இல்லத்தில் அழைப்பின் பேரில் எட்டு கட்சித் தலைவர்கள்  கூட்டத்தில் பங்கேற்றனர். பிறகு, அது கூட்டணி உருவாக்குவதற்கான அடித்தளமென் பேசப்பட்டது அதன் பின்னர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின்ன்  டெல்லி பயணத்தில் அது வெளிப்படையானது. 2024  ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிரணியைக் கட்டமைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி இறங்கியிருக்கிறார். மம்தா தலைமையில் அமையுமா என்று விவாதங்கள் தற்போது நடைபெறுகின்றன. ஆனால், மம்தா அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் சந்தேகமும் இல்லை.  மாயாவதி, சரத்பவார் தமிழ் நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சிக்கலை நன்கு உணர்ந்திருப்பதால்தான், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை ஏற்கும் எண்ணம் எனக்கு இல்லை. தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக அமையும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை வகித்தாலும் அதை ஏற்கத் தயார். அதில் எனக்கு எந்தப் பிரச்னையுமில்ல என மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். அரசியலில் எப்போதும் எதுவும் நடக்கலாம் எனக் கூறியுள்ளார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஆட்சியமைத்த பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக 2019 தேர்தலில் வெற்றி பெற்றது. செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர்கள் யார் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில், தற்போதும் பிரதமர் மோடி பிரபலமான தலைவராக விளங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. 32.8 சதவிகித ஆதரவுடன் பிரதமர் மோடி முதல் இடத்திலும், 17.2 சதவிகித ஆதரவுடன் ராகுல் காந்தி இரண்டாம் இடத்திலும், 7 சதவிகித ஆதரவுடன் மம்தா மூன்றாம் இடத்திலும் இருப்பதாக ‘பிரஷ்னம்’ ஆய்வு கூறுகிறது.

பாஜக வின் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள், பிற எதிர்க்கட்சிகள் அனைத்தும் உறுதியாக இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் தான் வலுவான ஓரு கூட்டணியை அமைக்க முடியும். ஆனால், அப்படியோர் அணியை அமைப்பது சாத்தியமா என்பது இப்போதய கேள்வி. அதேபோல் பாஜக அரசியல் அமைப்பு பைலாப் படி பத்தாண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு தலைவரும் பதவி வகித்த நிலை இருக்கிறதா என்ற வினாவிற்கு விடை வரும் வரை பலரும் அரசியல் அணிச்சேர்க்கைகள் குறித்து பேசத் துவங்கியுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...