கோபாலபுரம் தபால் நிலையத்திற்கு வாடகை கட்டிடம் தேவை
கோபாலபுரம் சென்னை 600086, தபால் நிலையம் இயங்குவதற்கு அந்தந்த பகுதியிலோ அல்லது அருகாமையிலோ (1-2 கி.மீ சுற்றளவிற்குள்) வாடகைக்கு கட்டிடம் தேவை. சுமார் 1500 சதுர அடி பரப்பளவுடன், தண்ணீர் வசதி, மின்சார வசதி, பார்க்கிங் இடம், கழிப்பறை வசதி உடைய கட்டிட உரிமையாளர்கள் சீல் வைக்கப்பட்ட கவரில் தங்களுடைய விருப்பக் கடிதங்களை “மு.ஸ்ரீராமன் முது நிலை அஞ்சல் கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம், சென்னை 600017” என்ற முகவரிக்கு தங்களுடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய தபால்களை 15.09.2021 அதற்குள் அனுப்பி வைக்கவும். குறைந்த கால வாடகை ஒப்பந்தம் – ஐந்து வருடங்கள்
பொதுத்துறை / அரசுத்துறை சார்ந்த இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தபால் அலுவலக வாடகைக்கு விடும் கட்டிடம் தரை தளமாக இருந்தால் நல்லது. குத்தகை ஒப்பந்தத்தின் பதிவு கட்டணத்தை கட்டிட உரிமையாளரே ஏற்க வேண்டும். ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
எந்த விண்ணப்பங்களையும் ஏற்பதற்கும் நிராகரிப்பதற்கும் தபால்துறைக்கு அதிகாரம் உள்ளது. இதேபோல சூளைமேடு தபால் நிலையம் இயங்குவதற்கு வாடகைக்கு கட்டிடம் தேவை
சூளைமேடு, சென்னை 600094 தபால் நிலையம் இயங்குவதற்கு அந்தந்த பகுதியிலோ அல்லது அருகாமையிலோ (1-2 கி.மீ சுற்றளவிற்குள்) வாடகைக்கு கட்டிடம் தேவை. சுமார் 1800 சதுர அடி பரப்பளவுடன், தண்ணீர் வசதி, மின்சார வசதி, பார்க்கிங் இடம், கழிப்பறை வசதி உடைய கட்டிட உரிமையாளர்கள் சீல் வைக்கப்பட்ட கவரில் தங்களுடைய விருப்பக் கடிதங்களை “மு.ஸ்ரீராமன், முது நிலை அஞ்சல் கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம், சென்னை 600017” என்ற முகவரிக்கு தங்களுடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய தபால்களை 17.09.2021 அதற்குள் அனுப்பி வைக்கவும். குறைந்த கால வாடகை ஒப்பந்தம் – ஐந்து வருடங்கள்.
பொதுத்துறை / அரசுத்துறை சார்ந்த இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தபால் அலுவலக வாடகைக்கு விடும் கட்டிடம் தரை தளமாக இருந்தால் நல்லது. குத்தகை ஒப்பந்தத்தின் பதிவு கட்டணத்தை கட்டிட உரிமையாளரே ஏற்க வேண்டும். ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
எந்த விண்ணப்பங்களையும் ஏற்பதற்கும் நிராகரிப்பதற்கும் தபால்துறைக்கு அதிகாரம் உள்ளது.
இந்தத் தகவல், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம், சென்னை-600 017, திரு.மு.ஸ்ரீராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்