முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளின் நலனுக்கான பாசன திட்டங்கள் மத்திய அமைச்சர் தகவல்

ஜல்சக்தி அமைச்சகம் சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளின் நலனுக்கான பாசன திட்டங்கள்












நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

விளை நிலத்தை தண்ணீர் சென்றடைவதை மேம்படுத்தவும், விளைச்சல் பகுதியை விரிவாக்கவும், தண்ணீர் சிறப்பாக பயன்படுத்தப்படுவதை மேம்படுத்தவும், நீடித்த தண்ணீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவும் பிரதமரின் கிரிஷி சிஞ்சயீ திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட பாசன பலன்கள் திட்டம், ஹர் கேத் கோ பானி, ஒவ்வொரு துளிக்கும் அதிக பயிர் மற்றும் நீர்நிலை மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் இதன் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

மேம்படுத்தப்பட்ட பாசன பலன்கள் திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டு ரூ 3,307.88 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 3,593.61 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 2,849.07 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 1,738.76 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 1,510.04 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹர் கேத் கோ பானி திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டு ரூ 1,001.91 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 1,678. 13 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 1,343.23 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 1,217.97 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 976.53 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ 899 கோடியாக உள்ளது.

ஒவ்வொரு துளிக்கும் அதிக பயிர் திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டு ரூ 1,991.24 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 2,819.49 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 2,918.38 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 2,700.01 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 2562.18 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ 4,000 கோடியாக உள்ளது.

நீர்நிலை மேம்பாடு திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டு ரூ 1,471.72 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 1,691.81 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 1,780.55 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 1,472.33 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 990.23 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ 2,000 கோடியாக உள்ளது.

தூய்மையான கங்கைக்கான தேசிய திட்டத்தின் கீழ் 2014-15-ம் ஆண்டு ரூ 170.99 கோடியும், 2015-16-ம் ஆண்டு ரூ 602.60 கோடியும், 2016-17-ம் ஆண்டு ரூ 1,062.81 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 1,625.01 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 2,626.54 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 2,673.09 கோடியும், 2020-21-ம் அண்டு ரூ 1,339.97 கோடியும் 2021-22-ம் ஆண்டில் 2021 ஜூன் 30 வரை ரூ 147.45 கோடியும் என மொத்தம் ரூ 10,248.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், தில்லி, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் இதர இடங்களில் மொத்தம் 346 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 11498.76 கோடி செலவிடப்பட்டு, 158 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

ஆறுகளை தூய்மைப்படுத்துவதற்காகவும், மாசை தடுப்பதற்காகவும் கங்கைக்கு நமாமி கங்கே திட்டமும், இதர நதிகளுக்கு தேசிய ஆறுகள் பாதுகாப்பு திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன.

தேசிய ஆறுகள் பாதுகாப்பு திட்டத்திற்கு 2018-19-ம் ஆண்டு ரூ 150.50 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 150.32 கோடி வழங்கப்பட்டது. 2019-20-ம் ஆண்டு ரூ 196 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 136.66 கோடி வழங்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டு ரூ 100 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 99.87 கோடி வழங்கப்பட்டது.

நமாமி கங்கே திட்டத்திற்கு 2018-19-ம் ஆண்டு ரூ 2370 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 2626.54 கோடி வழங்கப்பட்டது. 2019-20-ம் ஆண்டு ரூ 1553.44 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 2673.09 கோடி வழங்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டு ரூ 1300 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 1339.97 கோடி வழங்கப்பட்டது.

எந்தவொரு தனிநபரும் அவரது வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ மத்திய அரசு நிதியுதவி அளிப்பதில்லை. ஆனால், மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கும், ‘ஜல் சக்தி இயக்கம் - மழைநீரை பிடியுங்கள்’ எனும் பிரச்சாரத்தை ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

2021 மார்ச் 22 அன்று மாண்புமிகு பிரதமரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் தண்ணீரை சேமித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுகிறது.

நாட்டின் ஊரகப்பகுதிகளின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக பாரத் நிர்மான் திட்டத்தை 2005 முதல் 2014 வரை இந்திய அரசு செயல்படுத்தியது.

நீண்டகால பாசன திட்டங்களை நிறைவு செய்தல், நீர் மேலாண்மை, குறு பாசன, நீர் நிலைகளின் பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் மறு சீரமைப்பு உள்ளிட்டவற்றுக்காக பிரதமரின் கிரிஷி சிஞ்சயீ திட்டம் 2015-16-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கும், ‘ஜல் சக்தி இயக்கம் - மழைநீரை பிடியுங்கள்’ எனும் பிரச்சாரத்தை ஜல் சக்தி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

2021 மார்ச் 22 அன்று மாண்புமிகு பிரதமரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் தண்ணீரை சேமித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுகிறது.

அடல் ஜல், பிரதமரின் கிரிஷி சிஞ்சயீ திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், நீர்நிலை வளர்ச்சி மேலாண்மை, அம்ருத், யுபிபிஎல், எம்பிபிஎல், யூஆர்டிபிஎஃப்ஐ வழிகாட்டுதல்கள் 2014, தேசிய நீர் கொள்கை 2012 ஆகிய பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை இந்திய அரசு செயல்படுத்தி/எடுத்து வருகிறது.

ஆறுகளை தூய்மைப்படுத்துதல் ஒரு தொடர் நடவடிக்கை ஆகும். இந்த முயற்சிகளில் மாநிலங்களின் நடவடிக்கைகளுக்கு ஜல் சக்தி அமைச்சகம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

நமாமி கங்கே திட்டத்தின் கீழ், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து கங்கை நதியின் நீர் தரத்தை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது.

யமுனா நதியை பொருத்தவரை, ரூ 4355 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு நமாமி கங்கே திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் தரவுகளை எளிதில் அணுகக்கூடியவையாக, வெளிப்படைத்தன்மை மிக்கவையாக மற்றும் துல்லியமானவையாக ஆக்குவதற்கு தேவையான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

https://jalshakti-dowr.gov.in எனும் தளத்தில் நீர்வளத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து பதிவேற்றப்படுகின்றன.

தண்ணீர் தரவுகள் மற்றும் அவை சார்ந்த விஷயங்களுக்கான மத்திய தகவல் களஞ்சியமாக தேசிய நீர் தகவலியல் மையத்தை 2018 மார்ச் 28 அன்று இந்திய அரசு நிறுவியது. https://nwic.gov.in எனும் முகவரியில் அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து ஆறுகளின் நீர் தரத்தை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. தேசிய நீர் தர கண்காணிப்பு திட்டத்தின் மூலம் இது செய்யப்படுகிறது.

2018 செப்டம்பரில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையின் படி, 23 ஆறுகளில் 351 மாசடைந்த பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆறுகளில் ஏற்படும் மாசுகளைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் வழியாக செல்லும் இந்திரா காந்தி கால்வாய், குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ராஜஸ்தான் அரசின் சுகாதார பொறியியல் துறையின் படி, தண்ணீரின் தரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்திரா காந்தி கால்வாயின் தண்ணீரில் ஆபத்து விளைவிக்கக்கூடிய ரசாயணங்கள் எதுவும் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...