முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய டிஜிட்டல் பரிவர்த்தனை உபகரணம் இ-ருபி பற்றி அறிவோம்

 நிதி அமைச்சகம் புதிய டிஜிட்டல் பரிவர்த்தனை உபகரணம் இ-ருபி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்


 (பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 2-ம் தேதி ரொக்கமில்லா, நேரடி தொடர்பில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான, டிஜிட்டல் பரிவர்த்தனைத் தீர்வான இ-ருபி-யைத் தொடங்கி வைத்தார். நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், நேரடி பயன்மாற்றத்தை  (டிபிடி) மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றுவதில் இ-ருபி மிகப்பெரிய பங்காற்றப் போவதாக பிரதமர் கூறினார். மேலும் டிஜிட்டல் ஆளுகையில் புதிய பரிமாணத்தையும் அது அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையுடன் தொழில்நுட்பத்தை இணைத்து எவ்வாறு இந்தியா முன்னேறி வருகிறது என்பதன் அடையாளம் இ-ருபி என்று அவர் கூறினார்.)

இ-ருபி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

இ-ருபி என்பது அடிப்படையில் ஒரு டிஜிட்டல் வவுச்சர் ஆகும். அதனை பயனாளி அவரது தொலைபேசியில் குறுந்தகவல் வடிவிலோ அல்லது கியூஆர் கோட் வடிவிலோ பெறுவார். இது முன்கூட்டியே பணம் செலுத்திய வவுச்சர் ஆகும். அதனை ஏற்றுக்கொள்ளும் எந்த மையத்திலும் அதைக்காட்டி பயனாளி பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக, ஒரு ஊழியருக்கு குறிப்பிட்ட மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்று அரசு விரும்பினால், அது இ-ருபி வவுச்சரை ஒரு குறிப்பிட்ட தொகையை பங்குதார வங்கி மூலமாக வழங்கலாம். ஊழியருக்கு ஒரு குறுந்தகவலோ அல்லது அவரது போனில் கியூஆர் கோடோ அனுப்பப்படும். அந்த ஊழியர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று போனில் பெறப்பட்ட இ-ருபி வவுச்சர் மூலமாக பணம் செலுத்தி சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு இ-ருபி ஒரே தடவையிலான, நேரடி தொடர்பில்லாத, ரொக்கமில்லா வவுச்சர் அடிப்படையிலான பரிவர்த்தனை முறையாகத் திகழ்கிறது. இது எந்தவித அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை செயலி அல்லது இணையதள வங்கி அணுக்கம் ஆகியவற்றின் உதவியுமின்றி பயனாளிகள் பணம் பெறுவதற்கு உதவுகிறது.

ரிசர்வ் வங்கி சிந்தித்து வருகிற டிஜிட்டல் கரன்சி முறையாக இ-ருபி-யை எண்ணி குழப்பமடையக்கூடாது. இ-ருபி என்பது ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டதுடன், குறிப்பிட்ட டிஜிட்டல் வவுச்சர் நோக்கமுடையது.

நுகர்வோருக்கு இ-ருபி எவ்வாறு பயனளிக்கிறது?

மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடுகையில், இ-ருபியைப் பொறுத்தவரை பயனாளிக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது மிகப் பெரிய சிறப்பு அம்சமாகும். இது எளிமையான, நேரடி தொடர்பில்லாத பணம் பெறுவதை உறுதி செய்கிறது. இதற்கு தனிநபர் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இதில் மற்றொரு பயனும் உள்ளது. சாதாரண போன்கள் மூலம் கூட இ-ருபி முறையைப் பயன்படுத்தலாம். அதனால், ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும், இணையதள வசதி இல்லாத இடங்களில் உள்ளவர்களும் கூட இதனைப் பயன்படுத்தலாம்.

கொடுப்பவர்களுக்கு இ-ருபியின் பயன்கள் எவை?

இ-ருபி நேரடி பணப்பரிவர்த்தனை முறையை வலுப்படுத்துவதிலும், அதில் மேலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையிலும் பெரும் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், வவுச்சர்களை நேரடியாக அளிக்க வேண்டிய அவசியமில்லை என்பதுடன், செலவைக் குறைக்கவும் இது வழிவகுக்கும்.

சேவை வழங்குவோருக்கு கிடைக்கும் பயன்கள் என்ன?

முன்கூட்டியே பணம் செலுத்தும் வவுச்சராக இருப்பதால், இ-ருபி சேவை வழங்குவோருக்கு உடனடியாக தொகை கிடைப்பதை உறுதி செய்கிறது.

இ-ருபியை உருவாக்கியது யார்?

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை மேற்பார்வையிடும் இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ), ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வவுச்சர் அடிப்படையிலான இ-ருபி பரிவர்த்தனை முறையை உருவாக்கியுள்ளது.

நிதித்துறை சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையம் ஆகிவற்றின் ஒத்துழைப்புடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இ-ருபியை எந்த வங்கிகள் அளிக்கின்றன?

இ-ருபி பரிவர்த்தனைகளுக்காக என்பிசிஐ 11 வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது.  அவை ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் ஆகும்

பாரத் பே, பீம் பரோடா மெர்ச்சன்ட் பே, பைன் லேப்ஸ், பிஎன்பி மெர்ச்சன்ட் பே, யோனோ எஸ்பிஐ மெர்ச்சன்ட் பே ஆகியவை இதற்கான செயலிகள் ஆகும்.

இ-ருபி முன்முயற்சியில் மேலும் அதிக வங்கிகள் மற்றும் செயலிகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இ-ருபியை எங்கு பயன்படுத்தலாம்?

தொடக்கமாக என்பிசிஐ 1,600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை தொடர்பில் வைத்துள்ளது. இங்கு இ-ருபி முறையைப் பயன்படுத்தலாம்.

வரும் நாட்களில், தனியார் துறை ஊழியர்களுக்கு பயன்களை வழங்குவதற்கும், எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தொழில் பரிவர்த்தனைகளுக்கு பின்பற்றவும் ஏதுவாக  இ-ருபி பயன்படுத்தப்படும், தளம் விரிவாக்கப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...