முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேவை பெறும் உரிமை சட்டம்; அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவிக்கை

சேவை பெறும் உரிமை சட்டம்; அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவிக்கை. பொது சேவைகள் பெறும் உரிமைச சட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அறிவிக்கை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு.



திருச்சிராப்பள்ளி மாவட்டம், பகளவாடி குருநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்:

பொது சேவைகள் பெறும் உரிமை சட்டம், 20 மாநிலங்களில் நடைமுறையிலுள்ளது. 

இதற்கு மத்தியப் பிரதேசம், கோவாவில் யூனியனில் தனித் துறைகள் உருவாக்கப் பட்டது 

ஒவ்வொரு சேவைக்கும் காலவரம்பை மாநிலங்கள் நிர்ணயித்துள்ளது. 

ரேஷன் கார்டு வழங்க பல மாநிலங்கள், 30 நாட்கள் காலவரம்பும்

ஹரியானாவில் 15 நாட்களிலும் எட்டு நாட்களில் மின் இணைப்பும், ஏழு நாட்களில் ஜாதிச் சான்றும், நிலப்பதிவு, ஓட்டுனர் உரிமத்திற்கு ஒரே நாளும், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பிற்கு 12 நாட்களும் காலவரம்பு, மாநில சட்டத்தில் வரையறுக்கப்பட்டன..தகுதி உள்ளவர்கள், அரசின் சேவைகளைப் உடனடியாகப் பெற சட்டம் வழிவகுக்கிறது.

தமிழகத்தில் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. இ சேவை மனு இலஞ்சமாக பெற நேரில் சந்தித்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம்

 பலமுறை மனு செய்தாலும் தவறான, சம்பந்தமில்லாத தகவல்களைத்  தருகின்றனர். ஏற்கனவே ஊழல் செய்து பணிமாறுதல் பெற்றுச் சென்றவர்களை காப்பாற்ற நினைக்கிறார்கள் இதனால் ஊழல் அதிகரிக்கும் நிலையில்

இதைத் தவிர்க்க, பொது சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் ஓங்கி ஒலிக்கிறது

இதனால், சிறு பிரச்னைகளுக்கும் நீதிமன்றம் செல்வோரின் எண்ணிக்கைகள் குறையும். 

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். 

நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென  குருநாதன் தன் மனுவில் கூறப்பட்டது 

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, எஸ்.ஆனந்தி அமர்வு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய மற்றும் மாநில சட்டத் துறைச் செயலர்கள், மாநில பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலருக்கு அறிவிக்கை அனுப்பி செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.சேவை பெறும் உரிமை சட்டம் அமல் படுத்தப்பட்டால் இலஞ்சப் குறையும் என்பது அணைத்து மக்கள் எதிர்பார்க்கின்றனர் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் அறிமுகம் செய்யப்பட்ட சட்ட முன்வரைவு சேவை பெறும் உரிமைச் சட்டம் இதுவரை 13 மாநிலங்களில் சட்டத்தை நிறைவேற்றிய நிலையில்.

மக்கள் தங்களுக்குத் தேவையான பிறப்பு, இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, நிலத்திற்கு வரி செலுத்த பட்டா, முதியோர் உதவித்தொகை, கடவுச்சீட்டு போன்ற 150 சேவைகளை, சேவை பெறும் உரிமை சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையைப் பெற முடியும் ஒவ்வொரு அரசு ஊழியரும் துறை செய்ய வேண்டிய கடமை என்ன, அந்தக் கடமையைச் செய்துமுடிக்கக் குறைந்தபட்சம் எத்தனை அலுவலக வேலைநாள்கள் தேவையாக இருக்கும் என்பதை மக்கள் சாசனமாக அறிவிக்கவும். ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசும் தனித்தனியாக பொதுமக்கள் குறைதீர் ஆணையத்தை உருவாக்க வேண்டுமெனக் கூறுகிறது இச்சட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுத் துறைகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகியன அனைத்தும் இந்தச் சட்ட வரம்புக்குள் வரும் அரசுத் துறைகளில் ஒவ்வொரு சேவைக்கும் கால அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. தகுந்த காரணமின்றி சேவையை மறுத்த அல்லது தாமதித்த அரசு அதிகாரியின் ஊதியத்திலிருந்து, ரூபாய் 500 முதல், 50,000 வரை, அபராதமாக பிடித்தம் செய்து, மனுதாரருக்கு நஷ்டயீடாக வழங்கப்படுகிறது, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கிறது. இந்த சட்டம்

நிறைவேற்றியுள்ள மாநிலங்களின் விபரம் 

மத்தியப் பிரதேசத்தில் 2010 ஆம் ஆண்டும்

உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி மாதம் 2011 ஆம் ஆண்டும்

பீகார் மாநிலத்தில் மே மாதம்  2011 ஆம் ஆண்டும்

பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை மாதம் 2011 ஆம் ஆண்டும்

ஜம்மு காஷ்மீரில் ஜூலை மாதம் 2011 ஆம் ஆண்டும்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் மாதம் 2011 ஆம் ஆண்டிலும்

ராஜஸ்தானில் ஆகஸ்ட் மாதம் 2011 ஆம் ஆண்டிலும்

சத்தீஸ்கரில் செப்டம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டிலும்

டில்லி யூனியனில் செப்டம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டிலும்

உத்தரகண்டில்அக்டோபர் மாதம் 2011 ஆம் ஆண்டிலும்

ஜார்க்கண்டில் நவம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டிலும்

கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டிலும்

கேரளத்தில் ஜூலை மாதம் 2012 ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப் பட்ட நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் வரவில்லை ஆதலால் ஊழல் அதிகரிக்கும் நிலையில் தற்போது நீதிமன்றம் மூலம் வழக்கு தீர்ப்பு வந்த பின்னர் தமிழகத்தின் புதிய அரசு நிறைவேற்ற வாய்ப்பு உருவாகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...