பிரதமர் அலுவலகம் கேல் ரத்னா விருது இனிமேல், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் : பிரதமர்
கேல் ரத்னா விருதுக்கு, மேஜர் தியான் சந்த் பெயரை சூட்ட வேண்டுமென, நாடு முழுவதும் மக்களிடமிருந்து பல வேண்டுகோள்கள் பெறப்பட்டன என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கேல் ரத்னா விருது, இனிமேல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் என அவர் கூறினார்.
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னணி விளையாட்டு வீர்களில், மேஜர் தியான் சந்தும் ஒருவர் என பிரதமர் மேலும் கூறினார். நமது நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதுக்கு, அவரது பெயர் சூட்டப்படுவது பொருத்தமானது.இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் தயான் சந்த் முக்கியமானவர். நமது நாட்டிற்காக பல்வேறு பெருமைகளையும், கோப்பைகளையும் கொண்டு வந்தவர். நம் நாட்டில் விளையாட்டு துறையில் மிக உயரிய
விளையாட்டு துறைக்காக கேல் ரத்னா விருதுகள் கடந்த 1991 - 1992 காலக்கட்டம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருதினை, இந்தியாவின் சதுரங்கப்போட்டி ( செஸ்) ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த்-க்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை, கோபிசந்த், அபிநவ் பிந்த்ரா, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் போன்ற பல முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத்தை சேர்ந்தவரான தயான் சந்த்-ன் இந்தியாவுக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த தலைசிறந்த ஹாக்கி வீரர் ஆவார். கடந்த 1926ம் ஆண்டு முதல் 1949ம் ஆண்டு வரை இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடியுள்ள தயான் சந்த், 400 க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து அசத்தியவர். ஒலிம்பிக்கில் இந்திய அணி இதுவரை 12 முறை பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 1928, 1932, 1936ம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் இந்த தயான் சந்த.
மற்ற பெருமைகள்
தயான் சந்த்-ஐ விளையாட்டு துறையில் பெருமைப்படுத்துவது இது முதல் முறை அல்ல. இந்தியாவில் விளையாட்டு துறையில் சிறந்த பங்காற்றிய வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அது தயான் சந்த்-ன் பெயரில் தான் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள தேசிய மைதானத்திற்கு கடந்த 2002 ஆம் ஆண்டு தயான் சந்த் தேசிய மைதானம் என பெயர் சூட்டப்பட்டது.
பிரதமர் தனது தொடர் சுட்டுரைகளில் கூறியதாவது;பிரதமர் அலுவலகம்
மகளிர் ஹாக்கியில் நாம் மயிரிழையில் பதக்கத்தை இழந்தோம், ஆனால் நமது அணி புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது: பிரதமர்
“டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில், மகளிர் ஹாக்கியில் நாம் மயிரிழையில் பதக்கத்தை இழந்தோம். ஆனால் நமது அணி, நம்மால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்வோம், புதிய எல்லைகளை எட்டுவோம் என்ற புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது” என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நமது மகளிர் ஹாக்கி அணியின் மிகச் சிறப்பான ஆட்டத்தை நாம் என்றென்றும் நினைவு கூர்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் சுட்டுரைச் செய்திகளில் கூறியுள்ளதாவது:
“டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் நமது மகளிர் ஹாக்கி அணியின் மிகச் சிறப்பான ஆட்டத்தை நாம் என்றும் நினைவு கூர்வோம். அவர்கள் தம்மால் இயன்ற அளவு சிறந்த விளையாட்டுத் திறனை தொடர்ந்து வெளிப்படுத்தினார்கள். இந்த அணியின் ஒவ்வொரு உறுப்பினரும், அசாத்திய துணிவையும், திறமையையும், உறுதியையும் பெற்றிருக்கிறார்கள். இந்த உன்னதமான அணியை எண்ணி இந்தியா பெருமைப்படுகிறது.
மகளிர் ஹாக்கியில் நாம் மயிரிழையில் பதக்கத்தை தவற விட்டோம். ஆனால், இந்த அணி, நம்மால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்வோம், புதிய எல்லைகளை எட்டுவோம் என்ற புதிய இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்துகிறது. மிக முக்கியமாக, இவர்களின் வெற்றி இந்தியாவின் இளம் மகள்களை ஹாக்கி விளையாடவும், அதில் சிறப்பான நிலையை எட்டவும் பெரிதும் ஊக்குவிக்கும். இந்த அணியால் பெருமை கொள்கிறேன்”.
‘‘ ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியின் மிகச்சிறப்பான செயல்பாடு நமது ஒட்டு மொத்த தேசத்தின் கற்பனையை கவர்ந்துள்ளது. ஹாக்கி விளையாட்டை நோக்கி புதுமையான ஆர்வம், நாடு முழுவதும் எழுந்துள்ளது. இது எதிர்காலத்துக்கு மிகவும் நேர்மறையான அறிகுறியாக இருக்கிறது.
கேல் ரத்னா விருதுக்கு, மேஜர் தியான் சந்த் பெயரை சூட்ட வேண்டும் என நாடு முழுவதும் மக்களிடமிருந்து பல வேண்டுகோள்களை நான் பெற்றுள்ளேன். அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி.
அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கேல் ரத்னா விருது, இனிமேல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும்!
ஜெய்ஹிந்த்!
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னணி விளையாட்டு வீரர்களில், மேஜர் தியான் சந்தும் ஒருவர். நமது நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதுக்கு, அவரது பெயர் சூட்டப்படுவது பொருத்தமானது.




கருத்துகள்