1971 போரின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களை குறிக்கும் விதமாக விமானப்படை வீரர்கள் 700 கிலோமீட்டர் சைக்கிள் பயணம்

1971 போரின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களை குறிக்கும் விதமாக விமானப்படை வீரர்கள் 700 கிலோமீட்டர் சைக்கிள் பயணம்தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தை சேர்ந்த 16 வீரர்கள் தஞ்சாவூர் முதல் மாமல்லபுரம் வரையிலும், மீண்டும் மாமல்லபுரத்திலிருந்து தஞ்சாவூர் வரையிலும் 700 கிலோமீட்டர்  மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தின் தளபதி குரூப் கேப்டன் பி ஏ ஷா, 2001 செப்டம்பர் 10 அன்று இந்த மிதிவண்டி பயணத்தை தொடங்கி வைத்தார். கும்பகோணம், சிதம்பரம், புதுச்சேரி மாமல்லபுரம் மற்றும் வேளாங்கண்ணி வழியாக நடைபெற்ற இந்த பயணம் 2001 செப்டம்பர் 18 அன்று தஞ்சாவூரில் நிறைவடைகிறது.

 1971 போரில் இந்தியா பெற்ற வெற்றியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களை குறிக்கும் விதமாகவும், நமது சுதந்திரத்தை பேணிக்காப்பதில் விமானப்படை வீரர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை போற்றும் வகையிலும் இந்த மிதிவண்டி பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் நமது நாட்டின் வெற்றியை குறிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.

 மிகவும் குறுகிய காலம் அதேசமயம் மிகவும் தீவிரமாக நடைபெற்ற இந்த போரில், பாதுகாப்பு படையினரின் சிறப்பான ஒருங்கிணைப்பு, திட்டமிடுதல் மற்றும் செயலாற்றுதல் ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக இந்திய விமானப் படை வெற்றி பெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா