இந்திய கடலோர பாதுகாப்பு படை 2000 கிலோ கடல் வெள்ளரியை கைப்பற்றியது

2000 கிலோ கடல் வெள்ளரியை கைப்பற்றியது இந்திய கடலோர பாதுகாப்பு படைதடை செய்யப்பட்ட கடல் வெள்ளரியை,  2000 கிலோ அளவுக்கு இந்திய கடலோர காவல் படை, மண்டபம் அருகே இன்று கைப்பற்றியது.

கடல் வெள்ளரி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் இன்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சந்தேகத்திற்குரிய படகு ஒன்று  இன்று காலை 10.30 மணிக்கு இடைமறிக்கப்பட்டது. அந்த படகில் இருந்த  200 சாக்கு மூட்டைகளில் 2000 கிலோ கடல் வெள்ளரிகள் கைப்பற்றப்பட்டன.

மண்டபம் தெற்கு வெடலை பகுதியிலிருந்து 15 கி.மீ தொலைவில், ஆட்கள் இல்லாமல் அந்த படகு நங்கூரமிடப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட கடல் வெள்ளரிகள் மண்டபம் கொண்டு வரப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் கடல் வெள்ளரிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.  இந்தியாவில் அரியவகை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடல் வெள்ளரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா