2019-20 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு-செலவு, நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்குகள்
2019-20- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு-செலவு தொடர்பான நிதிக் கணக்குகள் குறித்த அறிக்கையை இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அலுவலகம் தயாரித்துள்ளது. இத்துடன், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பான (அதிக செலவு அல்லது சேமிப்பு) கணக்குகளையும் இந்த அலுவலகம் அறிக்கையாகத் தொகுத்துள்ளது.
இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரால் முறையாக கையெழுத்திடப்பட்ட இந்த இரண்டு அறிக்கைகளும் சட்டப் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக 09.09.2021 அன்று அனுப்பப்பட்டது.
கருத்துகள்