இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மும்பை ஐஐடி ட்ரோன் பயன்படுத்த விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி

உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மும்பை ஐஐடி ட்ரோன் பயன்படுத்த விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்), மும்பை ஐஐடி ஆகியவை ட்ரோன் பயன்படுத்த விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து துறை  தலைமை இயக்குனரகம் ஆகியவை நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளன.

அந்தமான் நிக்கோபார் தீவுகள், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து போன்ற இடங்களில், தடுப்பூசிகளை விநியோகிக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள   3000 மீட்டர் தூரத்துக்கு ட்ரோன்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மும்பை ஐஐடி, தனது வளாகத்துக்குள் ட்ரோன்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ட்ரோன் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளது. 

இதற்கு முன்பு, ஆகாயமார்க்கமாக மருந்துகள் விநியோகிக்கும் திட்டத்தை, முதல் முறையாக  தெலங்கானா விக்காராபாத்தில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா கடந்த 11ம் தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் ட்ரோன்கள் மூலம் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா