தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவராக சர்தார் இக்பால் சிங் லால்புரா பொறுப்பேற்றார்

சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவராக சர்தார் இக்பால் சிங் லால்புரா பொறுப்பேற்றார்


தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவராக சர்தார் இக்பால் சிங் லால்புரா மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி முன்னிலையில் புதுதில்லியில் இன்று பொறுப்பேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு நக்வி, சர்தார் இக்பால் சிங் லால்புராவுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்ததோடு, நிர்வாகம், சமூகம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் அவரது விரிவான அனுபவம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘அனைவருடன், அனைவருடன் நன்மைக்காக, அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சிகளுடன்’ லட்சியத்தை வலுவாக்கும் என்றார்.


அனைத்து பிரிவினருக்கும் அதிகாரமளிப்பதற்கான அரசின் முயற்சிகள் நல்ல பலன்களை அளித்து வருவதாக கூறிய அவர், சிறப்பு விசாரணை குழுவை அமைத்து 1984 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நீதியை உறுதி செய்ததாக கூறினார்.


நீண்ட நாள் கோரிக்கையான கர்தார்பூர் வழித்தடம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், குருத்வாரா சர்க்யூட் ரயிலை தொடங்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை பிரதமர் தமக்கு அளித்துள்ளதாக கூறிய திரு லால்புரா, சமுதாயத்திற்கு சேவையாற்ற தம்மால் ஆன முயற்சிகளை எடுக்கவிருப்பதாக கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா