மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் வெளியிட்ட காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு அறிக்கை

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ்



தொழிலாளர் வாரியத்தால் தயாரிக்கப்படும்  காலாண்டு நிறுவன அடிப்படையிலான அகில இந்திய வேலைவாய்ப்பு ஆய்வின் ஒரு பகுதியாக, காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வின் (2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை) முதல் காலாண்டுக்கான அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் இன்று வெளியிட்டார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி, செயலாளர் திரு சுனில் பர்த்வால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு முதன்மை ஆலோசகர் திரு டி.பி.எஸ். நெகி, தொழிலாளர் வாரியத்தின் தலைமை இயக்குநர் திரு ஐ.எஸ்.நெகி , அகில இந்திய ஆய்வுகளின் நிபுணர் குழு தலைவர் பேராசிரியர் எஸ் பி முகர்ஜி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


முடிவுகளை அறிவித்த அமைச்சர் திரு புபேந்தர் யாதவ், தேர்வு செய்யப்பட்ட 9 துறைகளில் முதற்கட்ட ஆய்வின்படி மதிப்பிடப்பட்டுள்ள மொத்த வேலைவாய்ப்பு 3 கோடியே 8 லட்சம் என்றும், இது 6-வது பொருளாதார கணக்கெடுப்பு (2013-14) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 2 கோடியே 37 லட்சத்தை விட 29% அதிகம் என்றும் கூறினார்.



முழு அறிக்கையை இங்கே காணலாம்:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/sep/doc202192701.pdf

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்