மும்பையில் நீட் தேர்வில் மெகா மோசடிகள் சிபிஐ விசாரணை தீவிரம்

மும்பையில் நீட் தேர்வில் மெகா மோசடிகள் சிபிஐ விசாரணை தீவிரம்


மகாராஷ்டிராவைச் சேர்ந்த கோச்சிங் சென்டர் நடத்தும் நிறுவனம் ஒன்று நீட் தேர்வில் ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் ரூபாய் 50 லட்சம் வாங்கி ஆள்மாறாட்டம் செய்த 5 பேரை தேர்வு எழுத முயன்றவர்களை சிபிஐ,   கைது செய்தனர்.


இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்படுகிற நிலையில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன‌.

அது தொடர்பாக ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம், அதன் இயக்குநர் பரிமல் கோட்பள்ளிவார் மற்றும் பல மாணவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் 50 லட்ச ரூபாய் வரை கல்வி நிறுவனம் வசூலித்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிப்பது தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில், 'பரிமல் கோட்பள்ளிவார் மோசடியான வழிகளைப் பின்பற்றி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கிறார். இதற்காக மாணவர்களின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பெரும் பணத்தையும் பெறுகின்றனர். பின்னர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடத்தப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.


இதில் ஒப்புக்கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து காசோலைகள், மாணவரின் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கோச்சிங் சென்டர் வாங்கி வைத்துக்கொண்டு. மாணவரின் பெற்றோர் ரூபாய் 50 லட்சத்தை அளித்த பின் மதிப்பெண் சான்றிதழைத் திரும்ப அளிக்கிறது. சிபிஐ எஃஐஆரில் மேலும், 'கோச்சிங் சென்டரில் இருப்பவர்கள் மாணவர்களின் விண்ணப்பங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து திட்டமிட்ட தேர்வு மையங்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.


ஆள் மாறாட்டம் செய்ய ஏதுவாக மாணவர்களின் விண்ணப்பத்தில் இருக்கும் புகைப்படங்களையும் அவர்கள் மாற்றியுள்ளனர். மாணவர்களின் ஆதார் அட்டையின் தகவல்களைக் கொண்டு போலியாக அடையாள அட்டையைத் தயார் செய்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சில மாணவர்களுக்கு விடை குறித்த தகவல்களை அளிப்பதாகவும் கோச்சிங் சென்டர் உறுதி அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.                                செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்குக் காத்திருந்த சிபிஐ இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் மொத்தம் ஐந்து மாணவர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்ய கோச்சிங் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் அவர்களைக் கையோடு பிடிக்க சிபிஐ அத் தேர்வு மையங்களில் காத்திருந்தது. இத் தகவலை எப்படியோ தெரிந்து கொண்ட கோச்சிங் நிறுவனம், அவர்களைத் தேர்வு எழுத மையங்களுக்கு அனுப்பாத நிலையில்

 தேர்வு மையத்தை தேர்வு செய்து, அதில் ஹால் டிக்கெட்டில் புகைப்படங்களை மாற்றி, போலி அடையாள அட்டைகளை உருவாக்கி, ' ஆள் மாறாட்டம் செய்து வேறு நபர்களை' நீட் தேர்வு எழுத முயன்ற மகாராஷ்டிராவின் ஆர்.கே.எஜூகேசன் கேரியர் நிறுவனத்தின் ஐந்து பேரை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சமீபத்தில் .


முன்னதாக நீட் தேர்வு நடந்த சமயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூர் மற்றும் சிகார் பகுதிகளில் மாணவர்களுக்கு பதிலாக போலியான நபர்கள் மூலம், நீட் தேர்வு எழுதவைக்கும் கும்பல் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது . அதன் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட  காவல்துறையினர், இரண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து சில மருத்துவ மாணவர்கள் உட்பட 21 பேரைக் கைது செய்தனர்.

கைதானவர்களிடமிருந்து, சந்தேகிக்கும் வகையில் தைக்கப்பட்டு இருந்த ஏராளமான N-95 மாஸ்குகள் கைப்பற்றப்பட்டதில் அவற்றை பரிசோதிக்கவே மாஸ்கிற்கு உட்பகுதியில், தகவல் தொடர்பு சாதனங்கள் மறைத்து தைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், மாஸ்கிற்குள் சாதனங்களை மறைத்து வைத்தால் தேர்வறையில் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்பதால், ஆன்லைனில் தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கி இந்த முயற்சியை மேற்கொண்டதாக கைதானவர்கள் தெரிவித்தார்கள்.


கண்காணிப்பாளர் உதவி தேர்வு அறைக்கு வெளியே இருப்பவர்களை தொடர்பு கொள்ள மாஸ்கின் உட்பகுதியில் பேட்டரி மூலம் இயங்க கூடிய கருவியை பொருத்தியுள்ளனர். நானோ சிம் கொண்ட இந்த கருவியில் ஒரே பொத்தானை அழுத்துவதன் மூலம், அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வெளியே இருப்பவர்கள் பேசுவதை தேர்வு எழுதுபவர்கள் கேட்க, காதின் உட்பகுதியில் பொருத்தக்கூடிய சிறிய வடிவலான இயர்பீஸ்களையும் பயன்படுத்தியுள்ளது. ஜெய்பூரில் தேர்வறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட, தினேஷ்வரி குமாரி எனும் மாணவி உட்பட 8 பேரை போலீசார் நீட் தேர்வு நடந்த அன்று கைது செய்தனர். 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை சில கோச்சிங் சென்டர்கள் எழுத வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளதையும். சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். பல உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்‌ மேலும் இந்த ஊழல் எப்படி நடந்துள்ளது என்பதை இப்போது காண்போம்...சில மருத்துவக் கல்லூரிகள் முகவர் ஒருவரை அமர்த்திக் கொண்ட பின்னர் அவர் இராஜஸ்தான் மாநிலம் கோட்டா சென்று அங்கு மருத்துவம் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களில் சுமார் 300 பேர்களை அழைத்து வந்து அவர்களை நீட் தேர்வு எழுத வைக்கவே, அவர்களும் தேர்ச்சியாகிறார்கள். அவர்கள் கௌன்சிலிங் சென்ற பிறகு எங்கு வேண்டுமென்று முகவர் கூறும் ஒரு கல்லூரியையே கூறுகிறார்கள். 


முதல் சுற்று கவுன்சிலிங் வருகிற போது அதற்கு ஆவணங்கள் சரிபார்ப்பு இல்லை என்பதால் நீட் மார்க்கைக் கொடுத்து சீட் உறுதி பெறுகிறார்கள்! பின் சேராமல் இருந்து விடுகிறார்கள். இதற்கு அவர்களுக்கு அபராதம் (பைன்) கிடையாது.

அடுத்து இரண்டாம் சுற்று கௌன்ஸிலிங் வருகிற போது அதிலும் அவர்கள் வந்து பின்னர் சேராமல் இருந்து விடுகிறார்கள். ஆனால் இப்போது இரண்டு லட்சம் அபராதம் (ஃபைன்) கட்ட வேண்டும் என்பதால் அதை அந்த முகவரே கட்டி விடுகிறார். அடுத்து மாப் அப் ரவுண்ட் என்ற சுற்று வருகிற போது இதற்கும் அவர்கள் வருகிறார்கள்! இதிலும் சேராமல் இருந்து விடுகிறார்கள் இதற்கு அபராதம் (ஃபைன்)  இரண்டு இலட்சம் ரூபாய் அதையும் அந்த முகவரே கட்டி விடுகிறார் இந்த முறையும் சேராமல் ஒப்படைக்கப்பட்டு விட்டால் அந்த சீட்டுகள் ஒப்படைத்த (சரன்டர்) மொத்தத்தையும் அந்தக் கல்லூரிக்கே நிரப்பபும் உரிமை திரும்பக் கொடுக்கப்பட்டு விடும்.

இப்போது அத்தனை சேர்க்கை சீட்களும் கல்லூரி நிர்வாகம்  மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு ஒப்படைக்கப்படும். நிர்வாகம் மொத்தத்தில் எவ்வளவு செலவு செய்கிறது எனக் கூட்டிக் கழித்துப் பார்த்தால்


இரண்டாம் கௌன்ஸிலிங் அபராதம் (ஃபைன்) இரண்டு லட்சம், மாப் அப் கௌன்சிலிங் அபராதம் (பைன்) இரண்டு லட்சம், பரீட்சை எழுதிய மானவர்களுக்கு கமிஷன் அல்லது கூலி இரண்டு இலட்சம், முகவருக்கு இரண்டு லட்சம் ஆக மொத்தம் எட்டு இலட்சம் செலவழிக்கிறது ஒவ்வொரு தனிப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி! இப்படி எட்டு லட்ச ரூபாய் செலவு செய்து சரண்டர் செய்யப்பட்ட சீட்டை 50 லட்சம் முதல் 70 லட்சங்களுக்கு மேனேஜ்மென்ட் விற்கிறது இந்த இலட்சணத்தில் தான் நீட்  நீட் என்று நீட்டிக்க முயன்ற நிலையில் தமிழ்நாடு எதிராக ஓய்வு பெற்ற நீதிபதி இராஜன்  தலைமையிலான குழு அறிக்கை தமிழக அரசிடம் வழங்கிய நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பலவகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இதை அறியாத சில கட்சிகள் மற்றும் ஒரு சதவீதம் அறை சதவீதம் உள்ள முற்போக்கு ஜாதி அமைப்புகள் எதிர்ப்பு நிலையும். உண்மை வேறுவிதமாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா