குடியரசுத் தலைவர் இராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்

குடியரசுத் தலைவர் செயலகம்


இராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இன்று காலை தனது இரண்டாவது கண்ணுக்கு புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இது வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதே ராணுவ மருத்துவமனையில் அவரது முதல் கண்ணுக்கு  கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி, புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. கண்புரை நோய்  பல காரணங்களால் வளர்கின்றன. நெடுங்காலமாக கண்களில் புற ஊதாக்கதிர்கள் படுவது, சர்க்கரை நோயின் தாக்கம், இரத்த அழுத்த நோயின் தாக்கம், காயம் ஏற்படுத்துதல் போன்ற கண்வில்லையின் புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பிறக்கும்போது அல்லது மிக இளமையில் கண்புரை ஏற்படுவதற்கு காரணம் குடும்பத்தின் மரபுவழியாகவே.


கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் புரை உள்ள லென்ஸ் நீக்கப்பட்டு, ஒளிபுகும் தன்மையுள்ள ஐஓஎல் லென்ஸ் என்னும் உள் கண் லென்ஸ் பொருத்தப்படும். கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்தால், பார்வை மீண்டும் தெளிவாகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 75 வயதாவதால், வயது மூப்பின் காரணமாக இயல்பாக ஏற்படும் கண்புரையாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தபின் மருத்துவமனையில் இருந்து குடியரசுத் தலைவர் டிஸ்கார்ஜ் செய்யப்பட்டார்.

கண்புரை என்பது கண் வில்லையில் (லென்ஸ்) ஒளி ஊடுருவுதல் தன்மையைக் (வெளிப்படைத்தன்மை) குறைக்கும் ஒரு நிலை ஆகும். கண்ணில் திரை விழுந்துள்ளது என்றும் எளிமையாக சொல்லலாம். இயல்பு நிலையிலிருந்து மாற்றப்பட்ட ஒருவித புரதத்தால் ஆனவை கண்புரைகள்

இவை விழித்திரையில் விழும் ஒளியின் அளவை குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. இது பெரும்பாலும் முதியவர்களுக்கு ஏற்படுகிறது. வயதானவர்களுக்கு, கிட்டப்பார்வை கூடுதலாக கண்ணில் சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணலாம். அவர்களுக்கு நீல நிறத்தை காண்கின்ற திறனும் குறைந்துவிடும்.

கண்புரை முற்றிவிட்டால், பார்வையில் குறைவோ பார்வை முற்றிலும் பறிபோகக்கூடிய நிலையோ ஏற்படலாம். இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். பொதுவாக இது இரு கண்களிலும் ஏற்படுமாயினும் ஒரு கண்ணிற்கும் மற்றொன்றிற்கும் ஏற்படும் பாதிப்புக்கு இடையே கால இடைவெளி இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா