முன்னனி நடிகையின் திருமணமும் விவாகரத்தும் விவாதமாக காரணமென்ன. பின்னணித் தகவல்

தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகை சமந்தா. சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 சீசன் வெளியானது முதல்   அப்படத்தில் சர்ச்சைக் காட்சிகள் அமைந்து குடும்பக் குழப்பத்தை உருவாக்கி தற்போது விவாகரத்தில் முடிந்துள்ளது.


நடிகர் நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து குறித்து பேசாத நிலையில் சில நாட்களுக்கு முன் பத்து வருடங்களாக நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது நான்கு வருட வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், பல திரைப் பிரபலங்களும் கருத்துக்களை கூறினர் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை விமர்சனத்தையும் வெளியிட்டதில் நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, பெயர் குறிப்பிடாத நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் எனப் பதிவிட்டுள்ளார். அமீர்கானும், நாக சைதன்யாவும் ‘லால் சிங் சட்டா’ என்கிற பாலிவுட் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 2022 பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகலாம்

சமந்தாவின் உண்மையான மாமியார் நடிகை அமலா இல்லைநடிகை சமந்தா நாகசைதன்யா பிரிவுக்கு முக்கிய காரணங்களாக இருக்கும் தகவல் 

திருமணத்திற்கு பிறகு திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாக சைதன்யா குடும்பத்துக்கு சொந்தமான, பல நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அன்னபூர்னா ஸ்டூடியோ ஆகியவற்றில் தன்னையும் ஒரு பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததுவே அவர்கள் இருவருக்குமிடையே கடும் மோதலாகியுள்ளது.இதில் திருமணமாகி நான்காண்டுகள்  அக்கினேனி குடும்பத்துக்கு வாரிசு பெற்றுக் கொடுக்க சமந்தா  ஒப்புதலில்லாததால் பிரச்சனை  அதோடு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க நாக சைதன்யா தடை போட, அதையும் மீறி சமந்தா நயன்தாராவுடன் சேர்ந்து 2 வது நாயகியாக நடித்து வருவதில், அமலாவின் கேரக்டரை இமிடேட் செய்யும் வளையோசை பாடலில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக பேருந்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியானதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு, இறுதியில் இப்படி முடிவு எடுக்கப்பட்டதாம்.நடிகை சமந்தா பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் திருமண முறிவு என்பதற்கு 200 கோடிகள் இழப்பீடு தருகிறோம் என்பது நமது நாட்டில் தான், அதே 200 கோடிகள் என்பது இரண்டு பெரியார் ஈ.வே.ரா சிலைகள் வைக்கவும் ஒரு தேவர் திருமகன் சிலை நிறுவப்படும் தொகையை விட அதிகம்.

மதுரையில் கட்டப்பட உள்ள அரசு நூலகத்தின் செலவில் பாதிக்கு 8 கோடிகள் குறைவு என்பதும்


நடிகர் ரஜினிகாந்தின் இரண்டு படத்திற்கான சம்பளம் என்பதும், நடிகர் விஜய்க்கு சரி பாதி குறை்வோடு  20 இலட்சமும் குறைவான ஒரு படத்தின் சம்பளம் என்றெல்லாம்

அறியும் போது . சமந்தாக்கள் சினிமா வாய்ப்புகளை விட அதிகம் திருமண வாய்ப்பு மூலம் கோடீஸ்வரிகளாக மாறுவதற்கு தமிழ் மக்கள் வழங்கும் சினிமா மோகம் மற்றும் இரசனை உள்ள நபர்கள் தான் அடித்தளம் அவர்களை அடுத்த திருமண மற்றும் விவாகரத்து செய்யும் திட்டம் போடக் காரணிகளாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா