போதையில் புல்லாங்குழல் இசை கேட்ட மதுரை காவல்துறை துணை ஆணையர் இடமாற்றம்.
மதுரையில் உள்ளாடை ஆயில் உடலோடு, 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலை புல்லாங்குழலில் வாசிக்க வைத்து ரசித்த ஆயுதப்படை துணை ஆணையர் சோமசுந்தரம், சென்னை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். காவல்துறை
துணை ஆணையர் சோமசுந்தரம், ஏற்கனவே மதுரையில் உதவி ஆணையராக இருந்தபோது இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியவர்.
பின் துாத்துக்குடி, சென்னை போன்ற இடங்களில் பணியாற்றி விட்டு பதவி உயர்வுடன் மதுரை வந்தார்.
சில நாட்களுக்கு முன் உள்ளாடையுடன் ஆயில் மசாஜ் செய்த உடலோடு இவர் அமர்ந்திருக்க, அருகில் காவலர் ஒருவர் புல்லாங்குழலில் 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலை இசைத்தார்.
அருகில் காலி மதுபாட்டில் இருந்தது.கண்ணியமிக்க காவல்துறை பதவியிலிருந்த சோமசுந்தரம் தன் சொந்த விஷயங்களுக்குக் காவலரைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்
அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்த பின்னர் சென்னை ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு இப்போது இது சோககீதம் ......வேறு ஒன்றுமில்லை இது அவர் கேட்க மறந்து போன இசையில் மீதம்......
.."ஆத்துகுள்ளே நேத்து ஒன்னை நெனச்சேன் ...வெக்க நேரம் போக மஞ்சக் குளிச்சேன்..கொஞ்சம் மறைஞ்சு பாக்கவா இல்ல முதுகு தேய்க்கவா...அது கூடாது .... இது தாங்காது..சின்னக் காம்புதானே பூவைத்தாங்குது...பொத்திவைச்ச மல்லிகை மொட்டு பூத்துருச்சு வெக்கத்தைவிட்டு"......
கருத்துகள்