துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் அலுவலகம் துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


துர்காஷ்டமி பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அன்னை துர்காதேவியின் ஆசீர்வாதங்கள் நமக்கு எப்போதும் உண்டு என்று தெரிவித்துள்ள பிரதமர், அவரது ஆசீர்வாதங்கள், மகிழ்ச்சி உணர்வு மற்றும் நமது சமுதாயத்தின் நலனை அதிகரிக்கச் செய்யட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

துர்காஷ்டமி நன்னாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னை துர்காதேவியின் ஆசீர்வாதங்கள் நமக்கு எப்போதும் உண்டு. நமது சமுதாயம் அன்னையின் ஆசீர்வாதத்துடன் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியுடன் திகழட்டும்.


உங்கள் அனைவருக்கும் மகாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நவராத்திரி புனித நாளில் அன்னை மகா கௌரியை வழிபடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது ஆசீர்வாதத்தால் அனைவரின் வாழ்வும் சிறந்து விளங்கட்டும். அன்னை மகா கௌரியின் துதிபாடுவோம் என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா