கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரியாக முன்னால் மத்திய அமைச்சருமான, டாக்டர்.EM.சுதர்சனநாச்சியப்பன் நியமனம்
கர்நாடக மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
கர்நாடக மாநிலத்தில் 58 உள்ளாட்சி அமைப்புகளில் 1,184 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை
முடிவில் காங்கிரஸ் 498 வார்டுகள், பாரதிய ஜனதா 437 வார்டுகள் ஜனதா தளம் 45 வார்டுகள், பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 204 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி 42.06 சதவீதம், பாஜக 36.90 சதவீத, பிற கட்சிகள் 21 சதவீதம் வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இருப்பினும், மொத்தமுள்ள 166 நகராட்சி வார்டுகளில் பாஜக 67 இடங்களும், காங்கிரஸ் 61 இடங்களும் பெற்றுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தலில் பொறுப்பானவராக நியமனம் செய்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரியாக நேற்று( மேனாள் மத்திய அமைச்சருமான, டாக்டர்.EM.சுதர்சனநாச்சியப்பன்.அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட போது எடுத்த படம். ,உடன் கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் சிவகுமார்,மேனாள் முதல்வர் மற்றும் மாநில நிர்வாகிகளும் உள்ளனர்..
கருத்துகள்