பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் சார்பில் மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள்
மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் வாரியாக அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், 01.03.2020 நிலவரப்படி தற்போது பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த விரிவான பட்டியலை மத்திய அரசு மக்களவையில் அளித்துள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு) புவிஅறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் பொதுமக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் அளித்த பதிலில் இது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 90 சதவீதத்திற்கு மேல் அளிக்கும் பத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுக்கான ஒதுக்கீட்டு காலிப்பணியிடங்களை நிரப்புவதை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) உள்ளிட்ட மத்திய அரசின் ஆள்சேர்ப்பு முகமைகளின் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன
கருத்துகள்