சிவகங்கை நகராட்சி ஆணையர்
பாலசுப்பிரமணியன். மே மாதம் 13 ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பொன்னையா தலைமையில் அனைத்து நகராட்சி ஆணையர்களுக்கும் வீடியோ கான்பிரன்சிங் முறையில் ஆய்வுக் குழு கூட்டம் நடத்தினார். அப்போது சிவகங்கை நகராட்சி வளர்ச்சி பணிகள், டெண்டர் விட்டதில் உள்ள பிரச்னைகள் குறித்து பொன்னையா, சிவகங்கை நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது அதையடுத்து சிவகங்கை நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியனை, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பொன்னையா பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அன்று இரவு நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, கமிஷனராக கூடுதல் பொறுப்பை ஏற்றார். அதன் பின்னர் சிவகங்கை நகரில் பணியாளர்கள் சார்பில் நகராட்சி நிர்வாக ஆணையரின் செயலைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
கருத்துகள்