முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தகவல்

அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தகவல்

அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மத்திகிரி எனும் இடத்தில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பண்ணையை இன்று நேரில் பார்வையிட்டார். இணையமைச்சரை  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயச்சந்திர பானு ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து பண்ணையில் உள்ள கால்நடைகள் , அதற்கான உணவுப் பயிர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஆகியவை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் காங்கேயம் வகை உள்ளிட்ட உயர் வகை காளைகள் வளர்க்கும் மையத்தை பார்வையிட்டு அங்குள்ள கால்நடைகள் வளர்ப்பு முறைகள், இன பெருக்கம், விந்து உற்பத்தி மற்றும் உறை விந்து வங்கி, குளிர் பதன சேமிப்பு ஆகிய மையங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகள் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் பயனாளிகளுக்கு இடைத் தரகர்கள் இன்றி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வழியாக அரசின் திட்டங்கள் மக்களை சென்று சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏழைமக்கள் பயன்பெறும்வகையில், ஜன் தன் வங்கிக் கணக்கு, விவசாயிகள் கெளரவ நிதி, இலவச எரிவாயு இணைப்பு, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடங்கள், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு  உள்பட பல்வேறு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என கூறினார்.

நாட்டில்  கப்பல் போக்குவரத்து, விண்வெளி என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என கூறிய அவர், 2014 ஆம் ஆண்டுக்கு பிறகுதான் மீன் வளத்துறைக்கு ஒரு தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது என கூறினார்.

கடந்த 70 வருடமாக மீன்வளத் துறைக்கு மொத்தம் ரூ. 4 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி வந்துள்ள நிலையில், 2015 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை  கிட்டத்தட்ட ரூ. 32 ஆயிரம் கோடி இந்தத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

சென்னை காசிமேடு துறைமுகம் உலக அளவில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது என கூறிய அவர், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 100 ஆவது ஆண்டு சுதந்திர  தினத்தில் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற உலக அளவில்  ஒரு வல்லமை மிக்க திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

முன்னதாக நாமக்கலில் நடந்த நிகழ்வில், மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கும் கையேட்டை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் வெளியிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...