இலஞ்ச ஊழல் புகாரில் சிக்கி சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மாற்றமான போக்குவரத்துத் துறை துணை ஆணையர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தின் முதல் தளத்தில் போக்குவரத்துத் துறை ஆணையரக அலுவலகத்தில் பணியாற்றினார். இவர் மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வுக்கு நடராஜன் இலஞ்சம் பெறுவதாகப் புகார்கள் வந்ததைப்.
பற்றி ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி மார்ச் மாதம் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அதிரடியாக நடத்திய சோதனையில் ரூபாய்.35 லட்சம், இலஞ்சம் பெற்ற குறிப்புகள் உள்ள டைரியும் கைப்பற்றப்பட்ட நிலையில். மேலும் துணை ஆணையர் நடராஜன், அவரது உதவியாளர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்குப்பதிவு செய்ததுடன் அதுதொடர்பாக தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்ததற்கிடையே தான்
போக்குவரத்துத் துறை துணை ஆணையர் நடராஜன் திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இலஞ்சப் புகாரில் சிக்கிய நடராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து எழுந்த நிலையில் தான் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை தற்போது பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நடராஜன் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைவில் எடுக்கலாம் எத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்துகள்